பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

286

செய்தியாளரும் ஒரு தசாவதானக் கலைஞரே!


அழகும் கம்பீரமும் ஆற்றலுமுடையத் தோற்றமுள்ளவர்களாய், சுயநலமற்ற பொதுநல அக்கறையுடையவர்களாய், எல்லாவற்றுக்கும் மேலாகப் பத்திரிகைச் சட்டங்களையும், அரசு சட்டங்களையும் உணர்ந்தவராய், அவற்றை மதிப்பவராய், உண்மையே உருவான ஒழுக்க சீலங்களைப் பேணுபவராய் இருந்தால்தான்; அந்தச் செய்தியாளரால் நாட்டுக்கும், சமுதாய மேம்பாடுகளுக்கும் நன்மைகள் இமயம் போல் ஓங்கி நிற்கும் தன்மையராய் திகழ்வார்கள். அப்படிப்பட்ட அறிவாளிகளால் தான் அந்தப் பத்திரிகையும் வளரும், வாழும் என்பதை உணர்பவர்தான் உண்மையான, உத்தமமான செய்தியாளர் என்ற பெயரைப் பெறுவார்.

இத்தகையை அரும்பெரும் பண்புகளை உடையவர் தான், நாளை ஒரு பத்திரிகைக்கு ஆசிரியராகவும், வர முடியும். வரவேண்டும். அப்போதுதான் பத்திரிகைக்கு நல்ல பெயர் நடமாடும். அத்தகையவர் ஒரு நாள் நாட்டை ஆள்பவராகவும் மாறும் காலம் தோன்றும் அல்லவா? அறிஞர் அண்ணாவைப் போல; கலைஞருக்கு நிகராக; வின்செண்ட் சர்ச்சில்லாக விளங்கிடலாம் இல்லையா?