பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

305



அமைச்சகங்கள் பத்திரிகைகளுக்குச் செய்திகளை அளிக்கும் நிலை ஏற்பட்டால், செய்தியாளர்களைத் தங்களது அறைக்குள் அழைத்து, அமைச்சர் முன்னிலையில் செய்திகளை வழங்கும் வழக்கம் உள்ளது.

அதுபோலவே, பிரதமர் அலுவலகமும், குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் அலுவலகங்களும் அடிக்கடிச் செய்தியாளர்கள் கூட்டத்தை நடத்திச் செய்திகளை அறிவிப்பார்கள்.

அந்தச் செய்திகளைப் பெற்றுக் கொண்ட அல்லது தொலைபேசி மூலம் அறிந்து கொண்ட செய்தியாளர்கள், நேராகத் தங்களுக்கென உள்ள செய்தியாளர்கள் அறைக்கு வந்து தொலைபேசி மூலம் அவரவர் பத்திரிகை அலுவலகங்களுக்கு அன்றையப் புதிய செய்திகளை அறிவிப்பார்கள்.

அரசு செய்திகளைப்
பெற்றிட மூன்று வழிகள்

தங்கள் ஆட்சி சம்பந்தப்பட்ட செய்திகளை அரசு மூன்று வழிகளில் செய்தியாளர்களுக்குத் தெரிவிக்கின்றன.

1. பத்திரிகை கடிதம் (Press Communique) : மூலமாகச் செய்தியை அறிவிப்பது ஒரு முறை. இது மிகவும் பொறுப்பான அறிவிப்பு முறை. அரசு சம்பந்தப்பட்ட முக்கியமான கொள்கைத் தீர்மானங்களை மட்டுமே இந்த முறை மூலம் அறிவிக்கப்படும்.

2. இரண்டாவது முறை : பத்திரிகைக் குறிப்பு முறை. அதாவது Press Note, அரசுத் தீர்மானங்கள், அரசு குறித்து சில விவகாரங்கள் பற்றிய அரசின் நிலைகளை இந்த முறை மூலம் அரசு விளக்குகின்றது.

3. பத்திரிகை வெளியீடு : அதாவது Press Release மூலமாக தினந்தோறும் நடக்கும் நிர்வாகச் செயல்களையும்,