பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

341



கட்சிப் பத்திரிகை
நடத்தப் பயிற்சி

கட்டுரைகளில் எழுதும் எழுத்துச் செறிவுகளைச் சுத்தமாக எழுத வேண்டும்; அதனால் தவறுகள் அதிகம் ஏற்படாது; Scrawl எனப்படும் கிறுக்கல் எழுத்தாக இருக்கக் கூடாது? இருந்தால் ஏராளமான பிழைகள் ஏற்படும். இப்படி எழுதுவதால் என்ன பயன்? என்று கேட்கிறீர்கள் இல்லையா?

நீ ஒரு Scribble பத்திரிகை ஆசிரியன். அதாவது பிரச்னைகளை சிக்கல் எடுக்கும் கட்டுரை ஆசிரியன் என்பதை நீருபிப்பாயா இல்லையா? சிந்தித்துப் பார்! இவ்வாறு நீ பெயரெடுத்துப் புகழ் பெற வேண்டுமா? முதலில் நீ எழுதும் அறையைச் சுத்தமாக வைத்துக் கொள்! அதனால் மனச் சுத்தம் பெற முடியும். கட்டுரைப் போக்கும், அதன் தொடர்புகளும், கட்சி சார்பாக ஆசிரியரைக் காண வருபவர்களும், அவர்கள் தரும் செய்திகளும் சுத்தமாக இருக்கும். இல்லையேல் குழப்பவாதிகள்தான் குவிவார்கள்.

கட்சிப் பத்திரிகையில் எழுதும் கட்டுரைகள் கரடு முரடாக, திகைப்பெனும் பள்ளத்திலே விழுகின்றாவாறு எழுதக் கூடாது. பழி, பாவம், சிறு பிழை ஆகியவற்றுக்கு அஞ்சுகின்ற பண்பாளராக இருந்தால்தான் உன்னைத் தேடி வந்து மனதைப் புண்படுத்தும் கட்சிக் குணத்தினர் scrupulous அண்டா மாட்டார்கள் - வாரார். இல்லையென்றால் பத்திரிகை அறை Scuffle அமளி, கை கலப்பு, வம்பு தும்பு எழும் அறையாகி விடும். அதாவது சட்டையைப் பிடித்துத் தள்ளுகின்ற தள்ளுமுல்லு அறையாகி விடும்.

அதனால், எழுதும் கட்டுரையில், அனுபவ அறிவுத் திறனும், தனித் திறமும், விறுவிறுப்பூட்டும் மாற்றுச் சுவையும் எடுத்துக் காட்டாக, சிலேடை நயம், கவிதை மேற்கோள், மற்றவர் கருத்தை ஆதரிக்கும் மாண்பு, அகநிலை நுண்நோக்கு ஆற்றல், நாம் எவருக்கும் இளைத்தவரில்லை என்கிற பெருமித நினைவுகள் ஓர் எழுத்தாளன் கட்டுரையில் நீய்ச்சலடிக்க வேண்டும்.