பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

345


அசைவ ஏடுகளா மாறி, ஆய்வுக் கருத்துக்களை வரும் இளைய தலைமுறைகளுக்கு வழங்குமோ! காலம்தான் வேகம் காட்ட வேண்டும்.

“Paper
War” - அல்ல

எனவே, கட்சிப் பத்திரிகைகள் Paper War, Paper Warfare ஆக மாறிவிடக் கூடாது. அது தாள் போர், தாள் வாக்குவாதம், செய்தித் தாள் மூலமாக, மேடைப் பேச்சில் கேட்டது வாயிலாக, தலைவர்களுடைய அறிக்கைக் கருத்துக்கள் சார்பாக நடத்தப்படும் கண்ணியமான, கட்டுப்பாடான, கடமையான ஒரு கருத்துப் போரே தவிர, வாக்குவாதக் களங்களே அன்றி, பத்திரிகைகள் கலவரமூட்டும் களமாக அது மாறிவிடக் கூடாது என்பதில் எழுத்தாளர்கள் எச்சரிகையாக எழுத வேண்டும்.

PARALYSIS
JOURNALIST

பத்திரிகைக்குப் பத்திரிகை இடையே வெளியிடப்படும் முரண் உரையாக, தலைவர்களுக்குத் தலைவர் அறிவிக்கும் முரணுரைபோலத் தோன்றும் மெய்யுரையாக, புரியாத புதிராக, ஏற்றுக் கொண்ட இயல்புக்கு மாறான செய்தியாக, கருத்தாக, நம்பமுடியாததாக, எழுதும் செய்திகளாகவோ, கருத்துக்களாகவோ, புதிராகவோ - எழுதும் கட்டுரைகள் இருக்கக் கூடாது.

அவ்வாறு அந்த எழுத்துக்கள் அமையுமானால், இருந்தால், எழுதிய எழுத்தாளர் தனது எழுத்தாட்சிகளை, சொல்லாட்சிகளை, பொருளாட்சிகளை, இயக்கும் ஆற்றலை இழந்து விட்ட பக்கவாதம், முடக்கு வாதம் (Paralysis Journalist) என்று, மற்ற எழுத்தாளர்களும் அல்லது பத்திரிகை உலகமும் அவரைப் பழிக்கும் என்பதை உணர வேண்டும்.

எழுதப்படும் கட்டுரைகள் எதுவானாலும் சரி, அது வெல்லுதற்கரிய inexpugnable-யனவாக இருந்தால்தான்,