பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

369


சொற்களை ஒன்று சேர்த்தல், இடைவெளி தரவேண்டியவை (Space) தொடர்பானவை (Punctuation) இணைக்க வேண்டியவை (Alignment) எழுத்தளவு (Type) போன்றவற்றில் எல்லாம் மாற்றம் செய்வதானால், அதற்கான குறியீடுகளைக் கவனமாக Prof-ல் குறிப்பிடல் வேண்டும்.

அச்சுப் பிழை திருத்தும் குறியீடுகளின் அடையாளங்கள் (Symbols) கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த அடையாளக் குறிகளைத்தான் அச்சுக் கோர்ப்பு பணிகளில் ஆங்கிலம் உட்பட எல்லா இந்திய மொழிகளிலும் அச்சகத்தார், நூல் பதிப்பாளர் பத்திரிகையாளர் அனைவரும் பயன்படுத்துகிறார்கள்.

எனவே இந்த அடையாளக் குறிகளை நன்றாக மனதில் பதிய வைத்துக் கொள்வது பிழைத் திருத்துவோர்க்கு மட்டுமன்று, அச்சுத்தொழில் சம்பந்தப்பட்டவற்றுக்கெல்லாம் தேவையானதுமாகும்.