பக்கம்:இந்தியா எங்கே.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

நம் தாய்

அது ஒரு பெரிய எரிமலை. அதைக் குமுறும்படிச் செய்துவிடாதே. உனது அன்பான பொருள்கள் அனைத்துமே சாம்பலாகிவிடும். உனது கதையை, நீ அவர்களிடம் சொல்லி வாய்மூடு முன்னரே, வானழகன் வேல்விழியை வெட்டி எறிந்து

விடுவான். வேல்விழியிடம் சொன்னால் அவளது

மலை போன்ற நம்பிக்கை ஒரு நொடியில் தகர்ந்து, உன்மீதே சாய்ந்துவிடும். உன் வாயால், 'மகளே என்று அழைக்கக்கேட்ட அவள் 'மாற்றான் மகள்' என்று நீ கூறப்போகும்,

கொடுங்கூற்றைக் கேட்டதுமே துடிதுடித்துப்

போவாள். ஜாக்கிரதை பொறுமைகொள். அதுதான் தாயின் தன்மை. உண்மைக்காகப் புலம்பும் தாயே! மகாசக்தியின் ஒரு வடிவமான உனது துணிவு எங்கே போய்விட்டது? பொங்கிச் சீறிக் குமுறிய எத்தனையோ துயரங்களை எல்லாம் ஆழம் காணமுடியாத உனது இருதயத் திலே வைத்துப் பூட்டி வைத்த புண்ணியத் தாயே! வேண்டாம். சொல்ல வேண்டாம். உன் உண்மையை உலகம் அறிந் துய்யும் காலம் நெருங்கி வந்துவிட்டது. அதற்குள் அவசரப்பட்டு உன்னை அம்பலப்படுத்தினால், அது உன் குழந்தையின், இந்த இன்ப நாடகத்துக்கு நீ விடும் கடைசித் திரையாகிவிடும். குழந்தைகளுக் காகவே உயிர் வாழும் குணமான தாய் நீ. சத்தியத்துக்காகவே சஞ்சலத்தை எல்லாம் வென்று நிற்கும் சாசுவத தெய்வம் நீ. தாயே! சாந்தம் கொள். கவிஞனின் கற்பனைக.ட இது வரை எட்டிப் பார்க்காதது தாயினத்தின்

தளராத சகிப்புத்தன்மை, ஒன்று தானம்மா

வாயால் சொல்லி விளக்க முடியாத உங்கள் சகிப்புத் தன்மை மாத்திரம் இல்லாவிடில் இன்று உலகில் உலாவும் எண்ணற்ற மாந்தரும், மகளிரும் குழந்தை உருக் கொள்ளுமுன்பே குப்பை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/100&oldid=537662" இலிருந்து மீள்விக்கப்பட்டது