பக்கம்:இந்தியா எங்கே.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் - 107

மாளிகையில் மற்றோர் இடம்

(பொன்மேனி ராயனும், மலைகிள்ளும்மாயனும். பொன்மேனி நெஞ்சை ஒரு கையால் பிடித்துக் கொண்டே உலவுகிறான்)

பொன் :

பொன் :

Lookou

பொன் :

பொன் :

மலைகிள்ளும்மாயா என்ன இது? மனம் என்னவோபோல் சுழல்கிறதே சொல்ல முடியாத குழப்பம். - சொல்ல முடியாமல் என்ன? கற்றாழைச் சாற்றிலே விளக்கெண்ணெய் ஒரு படி ஊற்றியது போலிருக்கிறதாக்கும். அந்தத் திருடன் யாராயிருக்கக்கூடும்? ஆருடம் பார்த்தால் தெரியக்கூடும்

அன்றே முயற்சி செய்திருந்தால், கையும் களவு

மாகப் பிடித்திருக்கக்கூடும். அதை இன்று கூட நாம் செய்யக்கூடும் பயப் படாதீர்கள். மலைகிள்ளும்மாயா! நீ வெளியே சென்று எப்படியும் முன் ஜாக்கிரதையாக இரு. போகிறேன். தனிமையாயிருந்தால் தங்கள் உயிர் வேறு எங்காவது சொல்லிக் கொள்ளாலாமல் அவசரப் பிரயாணம் போய்விடுமே என்று தான் பயப்படுகிறேன். பயப்படாதே மலைகிள்ளும்மாயா. நானெல்லாம் ரொம்ப நாளைக்கு உயிரோடு இருப்பேன். ஆமாம் மகராசா பலி பீடத்திலே நிற்கும் ஆட்டுக் கடாகூட ரொம்ப நாளைக்கு இருப்போ மென்ற எண்ணத்தோடுதான் தன் கழுத்திலுள்ள மரணப் பூசையின் பசுந்தழைகளை உற்சாகமாகக் கடித்துத் தின்று கொண்டிருக்கிறது. சே. மாயா இதென்ன உவமை? பிடிக்க வில்லையே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/109&oldid=537671" இலிருந்து மீள்விக்கப்பட்டது