பக்கம்:இந்தியா எங்கே.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

இந்தியா எங்கே?


யந்திரம் வெறி கொண்டு ஆணையிடுகிறது. ஆட்டிப் படைக்கிறது. ஆணவம் காட்டுகிறது!

நம்மிடம் ஏதோ ஒன்றைச் சொல்வி ஒட்டை வாங்கிப் பதவிக்குப் போனவுடன் குரங்கு மாதிரி இடம் மாறி விடுகிறான் அரசியல்வாதி. அவனை ஏனென்று கேட்பதற்கு இந்த நாட்டுச் சட்டமும் இடம் கொடுக்கவில்லை. நமக்கு போதிய துணிச்சலும் இல்லை. துணிந்து கேட்டால் நூறு கட்சி மாறுவது, நுட்பமான அரசியல் என்பான். இப்படியே போய்க் கொண்டிருந்தால் இந்த நாட்டின் எதிர்காலம் என்ன கதி ஆகும்?

இந்தக் கேவலமான நிலை இந்த நாட்டில் ஏற்படுவதற் காகவா. நம்முடைய மாபெரும் வீரர்கள் தங்கள் உடல் பொருள் ஆவி அனைத்தையும் தியாகத்தின் வீர பீடத்திலே பலி கொடுத்தார்கள்? -

உலகத்தின் பெரியோர்களால், “மிக உயர்ந்தவன்’ எனப் போற்றப்பட்டவனும், இங்கிலாந்து பார்விமெண்ட் அங்கத்தினன் ஆனவனும், 1905-ம் ஆண்டிலேயே ஐரோப்பிய சோஷலிஸ்ட் மாநாட்டில் இந்திய ஏழ்மை நிலையைப்பற்றி விளக்கியவனும் இந்திய சுதந்திர இயக்கத்தின் முதுபெரும் கிழவன் என்ற மரியாதைக்குரியவனுமான தாதாபாய் நெளரோஜி என்ற தனிப் பெரும் முதல்வன், பிரிட்டிஷ் சிங்கத்தை அதன் கூண்டுக்குள்ளேயே சென்று ஆட்டிப் படைத்தானே அது எதற்கு?

இன்று நாம் காணும் இந்த கண்ணருவி சுதந்திரத்தைக் கண்டு மகிழ்வதற்குத் தானா?

சுதந்திரம் நமது பிறப்புரிமை:

உலகின் மேதைகளெல்லாம், போற்றும்படியாக பேராசிரியப் பெருந்தகை, வீரத்தின் வித்தகன், போர்க்களத் தளபதி, தாய்க்குலத்தை தலைவணங்கிப் போற்றிய பண் பாட்டின் தந்தை, ஆண்மை மிக்க ஆசிரியன், தன்மானத்தின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/30&oldid=1401722" இலிருந்து மீள்விக்கப்பட்டது