பக்கம்:இந்தியா எங்கே.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம்

31


கோணாமல் முழங்கி, சுதந்திரம் சுயராஜ்யம் என்ற வார்த்தையைத் தனது இறுதி மூச்சோடு கலந்து, நமது இதயத்து முத்திரையாக்கி விட்டானே திருப்பூர் குமரன்! மானங்காத்த மனிதன். எதற்காக தம்பி எதற்காக,

சந்தர்ப்பவாதிகளின் சந்தையாகி, பாவிகளின் கைப் பாவையாகி மரணப் படுக்கையிலே துடிக்கிறதே இந்த ஈனமான சுதந்திரத்தைக் காண்பதற்காகவா எங்கள் குமரன் செத்தொழிந்தான் பதில் சொல் தம்பி! பேசாமல் இருந்தால் என்ன அர்த்தம்! பதில் சொல் தம்பி!

வீரவிளக்கு

மிகப்பெரிய கலையறிவு அழகுக் கலைகளை ரசிக்கும் கலா ரசிகன், கிரேக்கம், லத்தீன், ஆங்கிலம், பிரெஞ்சு, சமஸ்கிருதம், செந்தமிழ் ஆகிய மொழிகளின் ஆழ்ந்த கவிக் கடலில் நீந்தும் அறிவுடைப் புலவன், பன்மொழி மேதை பார் அட்லா! உலகத்திலிருக்கின்ற உயர்ந்த காவியச் சோலைகளையெல்லாம் கண்டு அனுபவித்தவன். கம்ப னெனும் மானிடனை, கவிச்சக்கரவர்த்தியின் காத்தத் தமிழின் காவியப் பெருமைகளை, ஆங்கிலத்தில் உலகுக்குச் சொன்னவன், திருக்குறளின் தெளிவை, தேர்ந்த ஆங்கிலப் புலமையிலே உலகுக்குத் தந்தவன், தமிழில் சிறுகதை இலக்கியத்திற்கு முதல் வழிகாட்டி, தமிழில் திறனாய்வு இலக்கிய மதிப்பீட்டு முறைக்கு முதல் வழிகாட்டி வீர விளக்கு வ.வே.சு. ஐயர்!

லண்டன் மாநகரில், ஏகாதிபத்தியம் கண்டு நடுங்கும் படியாகப் புரட்சிக் கனல் வளர்த்துப் புதுமை செய்தானே? எதற்காக போலிகளின் இருட்டறையாக, புல்லர்களின் கூடாரமாக இருக்கும் இன்றைய சுதந்திரத்தைக் காண்பதற் காகவா? சொல் தம்பி சொல்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/33&oldid=1401725" இலிருந்து மீள்விக்கப்பட்டது