பக்கம்:இந்தியா எங்கே.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 43

கள்ள வியாபாரிகளை நம்மால் கண்டிக்க முடிந்ததா? குழந்தைகளுக்கு வரும் நோயைத் தீர்க்க நாம் வாங்கி வரும் மருந்தையும் கலப்பட மருந்தாக்கிக் கொடுத்து ஏமாற்றும் கொள்ளைக்காரர்களை நாம் ஏதாவது செய்ய முடிந்ததா?

மற்றும், கள்ளக் கடத்தல்; நோட்டடித்தல், லஞ்சம் வாங்குதல்; பொய் வழக்காடுதல் போன்ற குற்றங்களை எல்லாம் கணிசமாகத் தடை செய்வதற்கு முயற்சி செய்தோமா? முடிந்ததா நம்மால்? ஏன்?

மக்கள் பண்பாட்டையும் ஆத்மாவையும் கெடுக்கும் நச்சு இலக்கியங்களையும், கொச்சைப் பத்திரிகைகளையும், பச்சைக் கதைகளையும், பாதி நிர்வாணப் படங்களையும் இல்லாமல் தடுத்தோமா? ஏன் இயலவில்லை தம்பி? இதை நீ என்றேனும் கேட்டதுண்டா?

கல்வி

எல்லோருக்கும் கல்வி என்ற பெயரால், எழுபது குழந்தைகளை ஒரு சிறிய அறையில் அடைத்து, ஏழெட்டு விசைப் புத்தகங்களையும் அதன் தலையிலே சுமத்தி, ஆறு மணிநேரம் அறியாப் பாலகர்களைக் கல்வியின் பெயரால் சித்ரவதை செய்கிறோமே - இது நியாயமா? இதற்குப் பரிகாரம் இல்லையா? இருபது குழந்தைகளுக்கு மேல் ஒரு வகுப்பில் இருந்தால். அந்த ஆசிரியர் எந்தப் பாடத்தையும் சொல்லித்தர முடியாது. என்ற நிலையை எண்ணிப் பார்த்து. செயல்பட முடியாதா?

நம்முடைய சிறுவர்கள் புகை பிடிப்பதும், மயக்க மாத்திரைகளை விழுங்குவதும், நிர்வாண சினிமாக்களை பார்ப்பதும், கெட்ட வார்த்தைகள் பேசுவதும், தெருத் தெருவாக அலைவதும், அந்தச் சிறுவர்களைப் பிடித்துத் தேர்தல் காலத்தில் கூலி கொடுப்பதும், கூச்சல் போடச் செய்வதும், குற்றேவல் செய்யச் செய்வதும், கள்ள ஒட்டுக்குக் கருவியாக்குவதும் எவ்வளவு பெரிய கொச்சை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/45&oldid=537605" இலிருந்து மீள்விக்கப்பட்டது