பக்கம்:இந்தியா எங்கே.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 இந்தியா எங்கே?

ஒருநாள் ஒன்று சேர்ந்து ஒருமனதாக "இந்தியா இன்று முதல் எவனுக்காவது அடிமையாக வேண்டும்” என்று முடிவு செய்தால் அதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டுமா? அதேபோல், சிறுபான்மை பாதுகாப்பு என்பதற்காக, ஒரு பைத்தியக்காரன் ஒரு மூட்டைக் கல்லை எடுத்துக் கொண்டு வந்து, ஒரு கூட்டத்தை பயமுறுத்தி, "நான் கல்லெடுத்து ஓங்கி அடிப்பேன்; நீங்கள் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும்; ஏனென்றால், நான் சிறுபான்மைச் சலுகை பெற்றவன்” என்றால், அவனுக்கு அஞ்சி மாலைபோட வேண்டுமா? என்பதை நாம் யோசிக்க வேண்டாமா?

மேலும், ஒழுக்கத்தில் உயர்ந்தவர்கள் பின்பற்றத்தக்கப் பெரியவர்கள். தலைமுறை தலைமுறையாக மாசுபடாமல் வாழ்ந்தவர்கள். தங்களுடைய நாணயத்தை, மனிதாபி மானத்தை பல்லாண்டுகளாக வாழ்வில் வாழ்ந்து காட்டிய சீலர்கள். இவர்களை நாமே விரும்பி வேண்டி, பொது வாழ்வுக்கு அழைத்து வர வேண்டாமா? அதை விட்டு விட்டு, “அவர்கள் வேட்பாளர்களாக முன் வரவில்லை; பணம் செலவு செய்யவில்லை; அவர் பேச்சுத் திறமை யில்லை; சூழ்ச்சிக் கலையில்லை; ஜாதி கட்சி பற்றில்லை - காக்காய் பிடிக்கவில்லை” என்றெல்லாம் கூறி நல்லவர்களை நாம் பொது வாழ்விலிருந்து வெறுத்து, ஒதுக்கி ஒழித்து விட வேண்டுமா?

மன்னர்களும் மந்திரிகளும்!

நூேறு மன்னர்கள் ஏழை நாட்டுக்கு அதிகம்; தேவையில்லை - என்று ஒதுக்கினோம்! சமஸ்தானங்களை யெல்லாம் ஒன்று சேர்த்தோம். ஒரு மாதிரியாக ஒழித்து விட்டோம்! ஆனால், இன்று ஐறுக்கும் மேற்பட்ட மந்திரி களிடம் இந்நாடு அகப்பட்டுக் கொண்டிருக்கிறதே! அவர்கள் செய்யும் அசுரத் துன்பத்தைப் பொறுத்துக் கொண்டு சாகிறதே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/48&oldid=537608" இலிருந்து மீள்விக்கப்பட்டது