பக்கம்:இந்தியா எங்கே.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் - 51

துப்பாக்கி நீட்டிய போது புறமுதுகு காட்டவில்லை. மரணத்தின் குண்டுகளை மலர்களைப்போல தம் மார்பிலே தாங்கிய மாவீரர் இதோ துப்பாக்கிக் குண்டுகளை விடக் கடுமையாக தாக்கும் இன்றைய சமுதாயத்தின் கேள்விகளை யும் தன் நெஞ்சகத்திலே ஏற்று அஞ்சாமல் அவர் கூறும் பதிலை கேட்போம். காந்தியடிகளின் அறிவுரையைக் கேட்க நெஞ்சில் துணிச்சல் வேண்டும்!

“சுதந்திரம் யாருக்கு? இந்திய நாட்டில் பரந்து கிடக்கும் ஏழு லட்சம் கிராமங்களில் வசிக்கும் கோடானு கோடி ஏழை மக்கள், வயிறார உண்ண வேண்டும். நாளை என்ன செய்வோம் என்ற ஏக்கமின்றி வாழ வேண்டும். உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க வீடும், சுகாதாரமான சுற்றுப்புறமும், அவர்கள் அடைய வேண்டும். அதற்கேற்ற படி பாவமற்ற நல்லதொரு தொழிலையும் உற்சாகத்தோடு அவர்கள் செய்யவேண்டும். இந்தக் கனவை நனவாக்குவதற் காகவே நமக்கு சுதந்திரம் வேண்டும். பரம ஏழைகளும் இது எங்கள் நாடு’ என்று எண்ணும்படியாக ஆட்சிமுறை அமைய வேண்டும். நாட்டின் அமைப்பில் தங்களுக்குரிய உரிமையும் கடமையும், பொறுப்பையும் உணரும் படியாகச் செய்தல் வேண்டும். பிறப்பில் உயர்வு தாழ்வு இல்லாமல் எல்லாச் சமூகத்தினரும் அன்யோன்யமாக வாழவேண்டும். அத்தகைய இந்தியா உருவாகவே. நான் பாடுபடுவேன்.” என்பதுதான் உத்தமர் காந்தியடிகள் சுதந்திரத்திற்கு அளித்த விளக்கம். அந்த விளக்கத்திலேயே இன்றைய இளம் தலை முறையினரின் கேள்விகளுக்கு ஏற்ற பதிலும் இருக்கிறது.

பதிலிருந்து என்ன பயன்? செயலில் காட்டுவது யார்? செயலில் காட்ட வேண்டுமானால், இன்றைய அரசியல் முறையிலும் நிர்வாக அமைப்பிலும் தீவிரமானதொரு புதுமுறையை பிரத்தியட்சச் செயல்முறையை நாம் கடைப் பிடித்தாக வேண்டும்!

இந்தச் செயல்முறைக்கு புரட்சி என்று பெயர் வந்தால் ੇ அதை நாம் வரவேற்போம். காரணம், அண்ணல் மகாத்மா

சொன்ன லட்சிய சமுதாயத்தை அமைப்பதற்காக கடந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/53&oldid=537613" இலிருந்து மீள்விக்கப்பட்டது