பக்கம்:இன்னமுதம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மதுரை

துரையம்பதிக்குச் செல்கின்ற ஞானசம்பந்தருக்கு மதுரைக் கோயிலைத் தூரத்திலிருந்தே சுட்டிக்காட்டி, புறச் சமயிகளாலே, மீனாட்சியின் கோயில் மூடப்பெற்றாலும், இறுதியிலே மதுரையை ஆண்ட கூன் பாண்டியன் மனைவியாகிய மங்கையர்க்கரசியின் உள்ளத்து உறுதியின் பயனாக இறைவனுக்கு அன்றாடம் பூசை நடை பெறுகிறது என்பதை அடியார்கள் கூறக் கேட்டுப் பாடியதாகும் இப்பாடல்:

மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை
வரிவளைக் கைம்மடமானி
பங்கயச்செல்வி பாண்டிமா தேவி
பணிசெய்து நாள்தொறும் பரவ
பொங்கழ லுருவன் பூதநாய கன்நால்
வேதமும் பொருள்களு மருளி
அங்கயற்கண்ணி தன்னொடும் அமர்ந்த
ஆலவா யாவது மிதுவே.

“மங்கையர்க்கரசி என்னும் பெயர் உடையவரும் சோழனின் மகளாவாரும், வளையல்களை அணிந்த கைகளை உடையவரும், மானியர்குடி எனப் பெறும் சோழர் குடியில் பிறந்தவரும், தாமரையில் வாழ்கின்ற இலக்குமி போன்றவரும் ஆகிய பாண்டி மாதேவி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னமுதம்.pdf/29&oldid=1551189" இலிருந்து மீள்விக்கப்பட்டது