பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 முதலியன அவற்றுள் சில சிறந்த திறனாய்வு நூலாகும் இவரது விமர்சனத் திறனுக்கும் ஆழ்ந்த புலமைக்கும் நடு நிலை பிறழாப் பண்புக்கும் பொது நோக்குக்கும் இவை எனறும் கட்டியங்கூறி நிற்பனவாகும். தியனாயவுத் துறையில் நக்கீர உணர்வுமிக்க இவர் உண்மைக்குப் புறம்பான கருத்துக்கள் எதையும் அவை எங்கிருந்து வந்தாலும் உரமாக எதிர்த்துப் போராட சிறி தும் தயங்கியதில்லை ஒரு சமயம ஆசான எழுதிய காரூர்' என்ற நூலைப் படித்தறிந்த திறனாய்வு மேதைகள் எனக் கருதப்பட்ட சிலர் பலமாக எதிர்த்ததோடு திறனாய்வு எனற பெயரால் அந்நூலைக் குறை கூறினர் உணமைக்கு புறம்பான அககூற்றுக்களை எதிர்த்து இவர் பலமாகப் போராடினார் ஆசானை நனகுணர்ந்த அறிஞர்கள் பல ரும் அந்நூலை நடுவு நிலைமையோடு ஆயநது வெளி யிட்ட கடடுரைகளையெல்லாம் திரட்டி அவற்றை நூல் வடிவில் வெளியிட்டு அந்நூலின் சிறப்பை-ஆசானின ஆற்றலை உலகறிய உணர்த்தி வெற்றி பெற்றார் அவ் வாறு வெளிவந்த திறனாய்வுக் கட்டுரைத் தொகுப்பே பண்டித சதஸ்' எனும் நூல். மலையாள இலக்கிய வரலாற்றைப் பொருத்தவரைக் கும் இவரளவுக்கு ஆழ்ந்த பரந்த ஆராய்ச்சிப் புலமை யுடையவர்கள் ஒரு சிலரையே இனறு நாம் காண முடியும் கருத்து வேறுபாடுகள் மலிந்த இத்துறையில் இவர் தனது முடிந்த முடிவுகளாக சில கருத்துக்களை அவ்வப்போது கட்டுரை வடிவில் வெளியிட்டு வருகிறார். இத்துறையில இவருக்குள்ள பெரும் புலமைக்கும் ஆராய்சசித திறனுக் கும் ஏற்ற சான்றாக இன்று விளங்கும் நூல தென் மொழி கள் புத்தக டிரஸ்டால் வெளியிடப்பட்டுள்ள "மலை யாள சாகித்தியம்' எனும் நூலாகும் ம ற் று ம் எஸ்.பி.சி.எஸ். நிறுவனம் வெளியிட்டுள்ள முதல் மலை யாள அகர முதலியான "குண்டர்ட் அகராதி' எனும்