பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

131


என்பார், கோல் ஓடுங்கால் சென்றதூஉம் செல்வதூஉம் அன்றே? அதனால் நிகழ்வு இல்லை என்ப. மூன்று என்பார் - நெருநல் - இன்று - நாளை எனவும், வந்தான் - வாரா நின்றான் - வருவான் எனவும், இவ்வாறு சொற்கள் மூன்று காலமும் காட்டுதலின் மூன்று என்ப. இவ்விகற்பமெல்லாம் அறிவித்தற்கு இவ்வாறு சூத்திரம் செய்தார் எனக் கொள்க.

ஏகாரத்தான், மூன்று என்பதே ஈண்டுப் பொருள் எனக் கொள்க.

“உலக வழக்கமும் ஒரு முக் காலமும்
நிலைபெற உணர்தரு முதுமறை நெறியான்”

என்றார் அகத்தியனார்,

சங்கர நமச்சிவாயர் (சிவஞான முனிவர்) உரை:- “பொருள்களின் தொழில் இறந்ததும் நிகழ்வதும் எதிர்வதும் ஆதலின், அவ்வாறு இயற்றும் காலமும் மூன்று கூற்றதாம் எனவும் உய்த்துணர்தலின், இங்ஙனம் உணராது காலம் இன்றெனவும் - நிகழ் காலம் ஒன்றுமே எனவும் - இறந்த காலம் எதிர்காலம் இரண்டுமே எனவும் கூறுவார் கூற்றை விலக்கிக் காலம் மூன்றே என்றார். இதன் திறம் இன்னும் விரித்துரைப்பிற் பெருகும். நிகழ் காலம் போல வெள்ளிடைப் பொருளன்றி, இறந்த காலம் எதிர்காலம் இரண்டும் மறை பொருளாய் நிற்றலின், இறப்பு நிகழ்வு என்னாது இறப்பு எதிர்வு என்றார்.

இதுகாறும், எடுத்துக் கொண்ட கட்டுரைக்கு அடிப்படை போடப்பட்டது. இனி, மேலே கட்டடம் எழுப்பவேண்டும்.

இதுகாறும் கூறியவற்றால், இறப்பு, நிகழ்வு, எதிர்வு எனக் காலம் மூவகைப்படும் என்னும் கொள்கை இலக்கண நூலாசிரியர்களாகிய அகத்தியனார், தொல்காப்பியனார்,