பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஏவுகணைகள்

57


 செல்வதற்குப் பதிலாகக் காற்று மண்டலத்தில் சுற்றித் திரிகின்றன.

படம் 27: தரையினின்று தரைக்கு டாங்கிகளுக்கு எதிராகச்
சுடப்பெறும் ஏவுகணைகள் ஜீப்பினின்றும் வீசியெறியப்படுகின்றன.

6. தரையினின்றும் நீருக்குக்கீழ்ச் சுடப்பெறும் ஏவுகணைகள் ; இவை கப்பல்களிலிருந்து வேறு கப்பல்களையோ அன்றி நீர்மூழ்கிக் கப்பல்களையோ தாக்கும் பொருட்டு ஏவப்பெறுபவை. இந்த வகைக் கணைகள் பொதுவாக வானினின்றும் நீருக்குள் அனுப்பப்பெறும் ஏவுகணைகளைப் போன்றவை. ஒரு கப்பல் தன்னுடைய சாதாரணமான துப்பாக்கிகள், டார்ப்பிடோக்கள் ஆழிடக் குண்டுகள் இவற்றின் வீச்சிற்கு அப்பாற்பட்ட இலக்குகளைத் தாக்குவதற்கு அதற்குத் துணைசெய்வதே இதன் நோக்கமாகும்.

7. நீரின்கீழினின்றும் வானிற்கு எறியப்பெறும் ஏவுகணைகள் : இவை நீர்மூழ்கிக் கப்பலினின்றும் விமானத்தை நோக்கி