பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துறைக் கோவை 69

137

சித குஞ் சரச முங் கொள் வஞ்ச கெஞ்சரைச் சீறியரஞ் சித குஞ் சரமன் ன சீராச ராசன் றிகிரியிலே மத குஞ் சரமன் ன கூந்தனல் லிர்நீர் வருத லுண்டோ மத குஞ் சரம் வெளி யேற்றுகின் றிர்கண் மறித்துவிட்டே.

சிதகு - குற்றம்; சரசம் - கா மச்சேட்டை, சீறி - சினந்து: அரம் சிதகும் சரம் - அரத்தினால் தேய்த்துக் கூராக்கப்பெற்ற அம்பு, அம்பு வருத்துமாறு போல அவர்களை வருந்தச் செய்வன் என்பதாம். மத குஞ்சரம் அன்ன கூந்தல்-வளமான குவளைமலர்போன்ற கரிய மயிர்முடி: நீர் - தண்ணிர், மதகு - நீர்நிலையிலிருந்து தண்ணிர் வெளிப்படும் மடை சரம் - நீர், கண் மறித்துவிட்டு - மதகின் நீர்வரு வழியாகிய கண்ணை அடைத்துவிட்டு; நீர் வருதலுண்டோ - தண்ணிர் வெளி வருமோ, நீர் என்னை அடுத்து வருதல் இயலுமோ, மதகுஞ்சரம் வெளியேற்றுகின்றீர் - மதர்த்த யானை போன்ற முலைகளை வெளிப் படுத்துகின்றீர்; கண் மறித்துவிட்டே - கண்ணைக் கையால் முடிவிட்டு.

138

கன்ன னெனப்பாற் கரற்குதித் திந்தக் கடற்புவியாள் மன்னன் சயசிங்கஞ் சீராச ராசன் வரையனையிர் சின்ன விடைக்குப் பெருவரைப் பாரந் திகைக்கவிட்டீர் முன் ன முமைக்கண் ணறையரென் றேசொலு மொய்யுலகே.

கன்னன் - கொடைக்கு எடுத்துக்காட்டாக உரைக்கப்படும் பெரு மன்னன்; உதித்து - பிறந்து; கடற்புவி - கடல் சூழ்ந்த உலகம்: சயசிங்கம் - வெற்றியினால் சிங்கம் போன்று பெருமிதத்துடன் இருப்பவன்; சின்ன விடைக்கு - சிறிய காளைக்கு பெருவரைப் பாரம்பெரிய மலைபோல் பெரிய பாரத்தை; திகைக்க விட்டீர் - அக்காளை திக்குமுக்காடும்படி முதுகில் ஏற்றிவிட்டீர்; முன்னம் - முற்பட்; உமை - உம்மை; கண்ணறையர் - கண்ணில்லாதவர், இரக்கமில்லாதவர்; மொய் - நெருக்கம். சின்ன இடைக்குப் பெருவரைப் பாரம் திகைக்க விட்டீர் - சிறிய நுண்ணிய உம் இடைக்குமேலே பெருவரை போன்ற பாரமுலைகளை - அவ்விடை வருந்துமாறு வெளிப்படுத்தியுள்ளிர்: கண்ணறையர் - கண்ணில்லாதவர் ; கண்னை மறைத்தமையால்

இவ்வாறு உரைத்தான்.