பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துறைக் கோவை 1む。

பொய்; திறல் - வலிமை; மட்டு - அளவு: கட்டுக்கு அடங்காத் தனம் - கட்டி வைப்பதற்கு இயலாதபடி மிகுந்துள்ள செல்வம்; கச்சுக் கட்டுக்கு அடங்காத முலை; தனம் - செல்வம், முலை. கடம் - கடன்; காது உறுகண் - வருத்தும் துன்பம்; காதளவு நீண்ட கண். அளவிட முடியாத பெருஞ்செல்வமுடையார் கடனாகிய வருத்தும் துன்பத்தை அளவுக்கு மிஞ்சிக் கைக்கொள்ளுதலைக் காட்டும் முறை நல்லதே? நன்றே என்றது நன்று அன்று என்பதாம். கட்டுக்கு அடங்காத் தனம் உடையார் . கச்சுக் கட்டுக்கு அடங்காது பருத்த முலையினையுடையார்; தம் காது உறு கண் கைக்கொளல் காட்டும் வழக்கு நன்றே என்க.

217

புன்கட்குட் பட்ட வரையா தரிக்கப்புவி யின் வந்தோன் என்கட் கைதந்த பெருங்கொடை வேந்த னிகன்றவருங் தன் கட்கை கூப்ப வருராச ராசன் றமிழ்மலையாய் கின்கட்கைம் மாறிலை யாயினென் மிைக் கிதிப்பெருக்கே.

புன்கண் - துன்பம்; ஆதரிக்க - அணைத்துக் காப்பாற்ற; என்கண் கைதந்த - என்னிடம் கைகொடுத்து உதவிய; இகன்றவர் - மாறுபட்ட வர், பகைத்தவர்; கைகூப்ப - கை குவித்து வணங்க, கைமாறு . ஒருவர் செய்த உதவிக்கு எதிராகச் செய்யும் மறு உதவி:ஒருவர் செய்த உதவிக்கு மாற்று உதவி செய்யும் தன்மை உன்னிடம் இல்லையானால்: இந் நிதிப்பெருக்கு என்னாம் - நீ பெற்றுள்ள செல்வப்பெருக்கினால் யா து பயன். நின்கண் கைம் மாறில்லையாயின் - உன்னுடைய கண்ணில் வைத்த கையை மாற்றவில்லையானால், நிதி - தனம்; நிதிப்பெருக்கு என்றது முலைகளை வெளிப்படுத்தமை குறிப்பிட்டவாறாம்.

218

ஒப்போதுங் கொண்ட லுடல்வெளுப் பெய்த வொளிகிதியம் கைப்போது பெய்கின்ற சீராச ராசன் கன வரை வாய் முப்போதுந் தந்த மனையாரை விட்டு முதுக்குறைந்தோர் எப்போது மீன ம2னயாரைக் கைக்கொள்வ தில்லையன்றே.

ஒப்பு ஒதும் கொண்டல் - கொடைக்கு ஒப்பாகப் பேசப்படும் மேகம்:

கொண்டல் உடல் வெளுப்பப் பெய்த - மேகம் நாணத்தால் உடல் வெளுக்கும்படி: அதாவது மேகத்தை விடவும் பெருங்கொடையாளன்