பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழமன்னர் விக்கிரமன், குலோத்துங்கன், இராசராசன் என்னும் மூவர் அவையிலும் கவிராட்சசன் என்னும் புகழுடைய ஒட்டக்கூத்தர் தலைமைப் புலவராய்ச் சிறந்து விளங்கினார். அதுபோலவே இராகவையங்கார் அவர்களும் ப ா ஸ் க ர சேதுபதி, முத்துராமலிங்க ராசராசேசுவர சேதுபதி, சண்முக ராசேசுவரநாகநாத் சேதுபதி ஆகி யோர் காலத்திலும் தொடர்ந்து சேதுசமத்தான மகா வித்துவானாயிருந் தார். தந்தை, மகன், பேரன் மூவரும் நம் மகா வித்துவானிடம் பெரும் மதிப்பு வைத்துப் போற்றிவந்தனர். _

இன்பாற் கரனா ரிராசரா சேச்சுரச்சேய் தென்னாக நாதவர சேதுபதி-மன்னரிவர் வீறுமே வன்ன மிசையா தே லென்னாவே கூறுமே பாரி கொடை

எனத் தாம் செய்த ப ரி க ைத க் காவியத்தில் தம்மைப் புரந்த சேதுபதிகள் மூவரையும் நன்றியுடன் போற்றியுள்ளமை காணலாம்.

மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் 13 ஆம் ஆண்டு விழாவில் இவர் படித்த "சேது நாடும் தமிழும்' என்னும் ஆய்வுரை தனிநூலாகச் சங்கத்தின் வழி வெளியிடப்பட்டுள்ளது. இராசராச சேதுபதியவர்களின் துண்டுதலால் வஞ்சிமா நகரம்’ என்னும் ஆராய்ச்சி நூலை ஆக்கி வெளியிட்டார். செந்தமிழில் தாம் எழுதிவந்த சங்ககாலப் பெண்புலவர்களின் வரலாற் றைத் தொகுத்து 'நல்லிசைப் புலமை மெல்லியலார்’ என்னும் பெயரில் வெளியிட்டார். பிற்குறித்த இரு நூல்களும் அந்நாளில் கல்லூரி மாணவர் களுக்குப் பாடப்புத்தகமாகவும் அமைக்கப்பெற்ற சிறப்புக்குரியனவாகும்.

அவ்வப்போது பாடல்நூல்கள் பலவும் இவர் ஆக்கி வெளியிட்டார். அவற்றுள் புவி எழுபது. தொழிற்சிறப்பு, திருவடிமாலை, சீராமநாமப் பாட்டு என்பவை குறிப்பிடத்தக்கன. இராசராசேசுவர சேதுபதி ஒரு துறைக் கோவை ஒரு சிறந்த படைப்பாகும். அவ்வப்போது இவர் பாடிய தனிப்பாடல்களும் பலவாகும்.

சென்னை, மதுரை, தஞ்சை முதலிய இடங்களில் நடைபெற்ற தமிழ் விழாக் களில் கலந்துகொண்டு தலைமை வகித்தும் சொற்பொழிவாற்றியும் அவையோரை மகிழ்வித்து வந்தார். வடமொழியிலும் வல்ல இவர் இருமொழி நூல்களிலும் இனிய பகுதிகளை எடுத்துகாட்டிச் சொற்பொழி வாற்றும் முறை கேட்போரைக் கவரவல்லதாயிருந்தது. இவருடைய அரிய பெரிய பொருள் நயம் மிக்க சொற்பொழிவுகளைக் கேட்பதன் பொருட்டுப் பெருந்திரளாகத் தமிழறிஞர் கூடுவது வழக்கமாயிருந்தது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் கம்பராமாயணம் பற்றியும் வேறு சில