பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சி. க மலையா ΧΧVΗ !

மகா வித் துவான் இராகவை யங் கார் புகழுரை

சேது நாடுந் தமிழும் ' என்ற நூலில் மகாவித்துவான் ரா இராக வையங்கார், இராசராசசேதுபதியின் திருப்பாட்டனாரான முத்துராம லிங்க சேதுபதி முதலாக மூன்று தலைமுறைச் சேதுபதிகள் இனிய தமிழ்க் கவிவலராயிருந்தார்கள் எனக் கூறியுள்ளார். இராசராசேசுவர சேதுபதியைப் பற்றி அந்நூலில் அவர் பின்வருமாறு எழுதுகிறார்.

நம் மாட்சி பொருந்திய மஹாராஜரவர்கட்குத் திருத் தந்தை யாரும் பெருங்கொடை வள்ளலுமா கிய பாஸ்கரசேதுபதி மஹா ராஜர் இத்தமிழின் பால் வைத்த அன்பு அவர்கள் இச்சங்கத்துக்களித்த பெருங்கொடையானும், பிற நாட்டரசரை இத்தருமத்தில் துாண்டிப் புரிவித்த நல்லுதவிகளாலும், தமிழ்ப்புலவர்க்களித்த பெருங்கொடை யானும் யாவரும் அறிந்ததே யாதலின், பெயர்த்துங்கூற வேண்டிய தொன்றன்று. இவர்களது தமிழபிமானத்தையும் , தமிழ் வண்மை யையும் யான் பலகாலும் அனுபவித்துள்ளேன். பாஸ்கர சேதுபதி பண்ணிய புண்ணிய மெல்லாந் திரண்டு ஒருருவெடுத்தனைய நம் சேதுபதி மஹா ராஜர் அவர்கள் இச்சேது ராஜ்யாபிஷேகஞ் செய் தருளிய காலந்தொட்டு இத்தமிழ்மாட்டுத் தம் பெருங்குலத்தோ ரொப்ப ஆரா வன்புகாட்டி ஒவ்வொரு சரஸ்வதி பூஜையிலும் பெருந் தமிழ்ப் புலவரையழைத் தளிக்கும் பெருங்கொடை யா மெல்லாங் கண்கூடாகக் கண்ட தொன்றே. இதனை.

புலவரைப் போற்று வதேகலை வாணிக்குப் பூசையென்று

நிலவரைப் பாள்கின்ற வேந்த ரினின்போ னினைந்தவர்யார் சல்வரைப் போற்றுதல் செய்யாம லென்றுந் தலைசிறந்த நலவரைப் போ ற்றிய சீராஜ ராஜ நரேந்திரனே.'

என்றியான் அன்பாற் பாடியுள்ளேன். இக்காலத்துள்ள சிறந்த தமிழ்ப் புலவரில் இச்சேதுபதி மன்னரை உள்ளவாறு புகழா தார் ஒருவரு மிலரென்று சொல்லத் துணியலாம். இதனால் இத்தமிழ் வளர்க்கும் தருமம் இம்மன்னர் குலதருமமென்பது தெளிவாம். இத்தகைய தமிழ் வேந்தரைத் தலைவராகப் பெற்றது இத்தமிழ்ச் சங்கத் துக்குப் பெருஞ்சிறப்பேயாம். t

SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS -------- _

1 டாக்டர் உ. வே. சாமிநாதையரவர்கள் சதாபிஷேக வரலாறு,

சென்னை- 1936.