பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"நாளை வா" எனப்பட்டான் 115 நடைபெற்றது. இறுதியில் இராவணன் இராமன் அம்பால் துன்பமடைந்து, தேரில் சாய்ந்துவிடுகிறான். அந்த நிலையில் இராமன் சாரதியாகிய மாதலி இராவணனைக் கொல்லுமாறு இராமனைத் துண்டு கிறான். ஆனால் இராகவன் மறுத்துவிடுகிறான். மனைவியைக் கவர்ந்து சென்றவன் என்ற காழ்ப்பு மட்டிலும் இராமனுக்கு இருந்திருக்குமாயின், இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இருக்கலாம். ஆனால், தான் போர் புரிவது ஒரு சிறந்த வீரனோடாகும் என்பதை அறிந்த இராமன், அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த மறுத்துவிட்டான்; படை துறந்துமயங்கிய பண்பினான் மேல் நடை துறந்து உயிர் கோடல் நீதியன்று' என்று கூறிவிட்டான். இறுதியில் இராவணன் இறந்தேவிட்டான். அவன் வீழ்ந்த நிலையைக் காண வருகிறான் இராகவன், இராமன் மனநிலையை ஆசிரியன் நன்கு எடுத்துக் கூறுகிறான். போரிடை மீண்டும் ஒருவருக்கும் புறங்கொடாப் போர்வீரன் பொருது வீழ்ந்த சீரினையே மனம்உவப்ப உருமுற்றுந் திருவாளன் தெரியக் கண்டான். (கம்பன் - 9903) மனத்தில் காழ்ப்பு ஒன்றும் இல்லாமலும், பகைவன் வீரத்தை உவந்தமையின், இறந்த அவன் பால் மகிழ்ச்சி யுங் கொண்டு கண்டானாம் இராமன். இராவணன் மார்பிற் குத்தியிருந்த யானைக் கொம்புகள் புறத்தே கழன்று சென்ற தழும்பைக் கண்ட இராமன், அவன் புறங்கொடுத்தான் போலும் என்று தவறாக எண்ணி மனம் வருந்துகிறான். அக்கருத்துத் தவறானது என்பதை வீடணன் எடுத்து மொழிய மனக்கவலை நீங்கிவிட்டான் இராமன். அம்மட்டோடு அமைய