பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'இடிக்குநர் இல்லான் 127 என்றல்லவோ கூறினார்: இத்தனை நாட்கள் அசோக வனத்தில் உறைந்த சீதை, இராவணனைப் பற்றியும் அவனது அரசியலைப்பற்றியும் அறிந்த உண்மைகள் பல. அவற்றுள் சிறந்தது அவன் அமைச்சரே இல்லாது ஆளுபவன் என்பதேயாம். பெயரளவில் உள்ள அமைச்சர்களும், இச்சகம் பேசி அவனது அழிவை நாடுபவர்களாய் உள்ளார்களேயன்றி இடித்துப் பேசி அவனது வாழ்வைப் பெருக்குபவராயில்லை. அரசியலறிந்த சீதைக்கு இது வியப்பை அளிக்கிறது. அவள் உடனே இராவணனை நோக்கி, - கடிக்கும்வல் அரவும் கேட்கும் மந்திரம், களிக்கின் றோயை அடுக்கும்ஈது அடாது என்று ஆன்ற ஏதுவோடு அறிவு - காட்டி இடிக்குநர் இல்லை; உள்ளார் எண்ணியது எண்ணி உன்னை முடிக்குநர் என்ற போது முடிவன்றி முடிவ துண்டோ? (கம்பன் - 5204) என்று கூறினாள். அமைச்சராயுள்ளார் ஏது காட்டி அரசனை நல்வழிப்படுத்த வேண்டும். அவ்வாறு இல்லாமல் இருப்பது ஒருபுறமிருக்க, உள்ளவர்களும் அவன் கூறுவதையே சரியென்று கூறும் கயவர்களாகவன்றோ உள்ளார்கள்? இந்நிலையில் சீதை சொல்லும்சொற்கள் அவள் மனத்தில் தோன்றிய இரக்கக் குறிப்பையே அறிவிக்கின்றன. இராவணனுடைய தவ வலியையும் படை வலியையும் அவள் காண்கிறாள். இத்துணை வலியும் பெருமையும் உடைய ஒருவனை அவள் கண்டதில்லை. இராமனிடம் இதனினும் மேம்பட்ட வலியைக் கண்டாளேனும், அரசனாயுள்ள இராவணனைச் சுற்றி யுள்ள சிறப்புக்களில் ஒரு சிறிதேனும் அயோத்தியில் இல்லை என்பதை அவள் அறிவாள். தன்னால் இ.மா.வி.-10