பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் நிருதர்தம் அருளும் பெற்றேன் நின்னலம் பெற்றேன் - நின்னோடு ஒருவருஞ் செல்வத்து யாண்டும் உறையவும் பெற்றேன் ஒன்றோ திருநகர் தீர்ந்த பின்னர் செய்தவம் பயந்தது ' என்னா வரிசிலை வடித்த தோளான் வாளெயிறு இலங்க நக்கான். (கம்பன் - 2787) அவளை நையாண்டி செய்வதற்காக இராமன் இவ்வாறு கூறினான் எனக் கம்பன் கூறுவதால் நாம் ஒப்புகிறோமே யொழிய, உண்மையில் அவன் விரும்பியே இவ்வாறு கூறியிருப்பான் என்றே அவன் நடத்தை அறிவிக்கின்றது. கம்பன் கூறுவதைப் போல, இராமன் விளையாடினானேயானால், அவன் விளையாட்டுச் சாதாரணமான விளையாட்டன்று என்றே கூறவேண்டும். அதன் விளைவுகளில் கருத்தைச் செலுத்தாது இராமன் அவ்விளையாட்டில் ஈடுபட்டது மனித இயற்கையன்றோ? ஜானகி எதிர்பர்ராமல் அங்கு வந்தது, இக்காதல் நாடகத்தைத் திடீரெனத் தடைப்படுத்தியது. - ஜானகியின் தீர்ந்த அழகைச் சூர்ப்பணகை கண்டாள்; இராமன் தன்னைக் கண்டு மாமோகம் கொள்ளாததற்குக் காரணத்தையும் உணர்ந்தாள். காட்டுக்கு வந்த அரசன், மனைவியை உடன் அழைத்து வருவான் என்று யாரால் எதிர் பார்க்கக் கூடும்! ஆகவே, ஜானகி இராமனுடைய ஆசை நாயகி என அவள் எண்ணிக்கொண்டாள்; அவளை அப்புறப் படுத்தினால்தான், அவன் தனக்கருளுவான் என்று தீர் மானித்தாள்; நினைத்தபடி செய்து முடிக்க அடுத்த நாள் முயன்றபோது, இலக்குவனால் மூக்கரியப் படடாள.