பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் நினைவினின்றும் யான் எப்படி விடுபடுவேன்? என்று அவளையே கேட்டான். சூர்ப்பணகை காட்டும் வழி கருதற்குரியது. கோமான் உலகுக்கு ஒரு நீ குறைகின்றது என்னே ? பூமாண் குழலாள் தனைவவ் வுதிபோதி என்றாள். - (கம்பன் - 3219) இங்குச் சூர்ப்பணகை சீதையை வஞ்சத்தால் கவர்ந்து வர வழி கூறுகிறாள். இவ்வாறு நிகழ்ந்தால் தான் இராமனுக்கு ஊறு நேராமல் இருப்பதோடு, தனக்கு உதவியாகச் சீதையும் நீக்கப்படுவாள். பேரறிஞனாகிய இராவணன் பெண்ணின்பம் காரண மாகத் தகாத நெறியில் சீதையை மனத்தில் சிறைவைத்துத் தன் அழிவுக்கு ஏற்பட்ட பாதையில் முதலடி வைத்தான்; இப்பொழுது இன்னொரு பெண்ணின் பேச்சைக் கேட்டவனாய், ஆராய்ச்சி யின்றி இரண்டாம் படியில் காலை வைக்க உறுதி கொள்ளுகிறான். சீதையை வஞ்சத்தால் கவர்ந்து வரத் தீர்மானித்த இராவணன், மாரீசன் உதவியை நாடி அவனிடம் சென்றான். அவனுக்குச் செய்தி சொல்லுமுன், தனக்கும் அவனுக்கும் மாறாத பழி நேர்ந்து விட்டது எனக் கூறிப் பின், இராமன் மனைவியைக் கவர்ந்து வர உன்னைத் துணையாகக் கொள்ள வந்தேன்' என்று கூறுகின்றான். வெப்பழி யாதென் நெஞ்சு முலர்ந்தேன் விளிகின்றேன் ஒப்பழி வென்றே போர்செயல் ஒல்லேன் உடன்வாழும் துப்பழி செவ்வாய் வஞ்சியை வெளவத் துணைகொண்டிட்டு இப்பழி நின்னால் தீரிய வந்தேள் இவண் என்றான். - (கம்பன் - 3242)