பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் சீதையை விடுவதுண்டோ! என்று இந்திரசித்தனிடம் கூறினானே, அந்த மையல் என்னவாயிற்று ? அங்கதனுங்கூட முற்ற ஓதியென்? முடித்தலை அற்ற போதன்றி, ஆசையறான் என்று கூறினானே! அத்தகைய மையல்! அதுவும் வீழ்ந்ததோ? என்பார்க்கு, "ஆம், அதுவும் அடங்கிற்று என்றான் கவிஞன். எனவே, சினமும், அச்சினம் தோன்றும் மனமும், தடக்கைச் செயலும், மயலும் அடங்கின என்று ஒன்றன்பின் ஒன்றாய் அடுக்கிக் கூறி அவலச் சுவையை அள்ளிக் கொட்டினான். இத்தகைய அழகைச் கூறுங்கால் ஒன்றைவிட ஒன்று வலிமை யுடையனவாக உள்ளவற்றை நிரலே கிளத்தலை மேல் நாட்டார் கிளைமாக்ஸ் (Climax) என்று கூறுவர். இதுகாறும் கூறியவற்றால், இராவணன் கேவலம் உடல் வீரம் ஒன்றே உடையான் போலும் என்ற எண்ணம் தோன்றுவது இயல்பே. ஆகவே, ஆசிரியன் மூன்றாம் அடியில் அக்கருத்தைப் போக்குகிறான். இராவணனது பலம் உடலோடு நின்று விடவில்லை. ஆன்ம பலத்திலும் அவன் எல்லையற்றவன் என்பதைக் காட்டவேண்டித் தம் அடங்கு முனிவரையும் தலையடங்க நிலையடங்கச் சாய்த்த நாள் என்றான். முனிவர்களையெல்லாம் அடக்கினான். இலங்கை வேந்தன் மனவடக்கம் இல்லாமல் கேவலம் மூக்கைப் பிடித்து மூச்சை நிறுத்தி உயிரைவிடும் அத்தகை. யோரையா வென்றான்? இல்லை. புலன்கள் தாமாகவே அடங்கின. தலை சிறந்த இருடிகளை முற்கூறிய கூட்டத்தினின்று பிரிப்பதற்க்ாகத் தம் அடக்கு முனிவர் என்று கூறாது தம் அடங்கு