பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பியம் 9 குறிக்கிறான். இவை இரண்டையுஞ் செய்கிறவன் கலைஞனாகிய கம்பன் என்பதை மறந்துவிடக் கூடாது! மாட்சியோடிருந்த இராவணனை ஏன் வீழ்ச்சியடையச் செய்கிறான் என்று கேட்க நமக்கு உரிமை இல்லை. ஆனால், எவ்வாறு வீழ்ச்சியடையு மாறு செய்கிறான் என்பதே நாம் காணவேண்டுவ தொன்று. கலைஞன் தனது கற்பனையால் இப்பாத்திரத்தை ஆக்கினானாயினும் அவனுக்குக் கூறப்பட்ட குணங்களெல்லாம் உலகில் காணப் படாதவையல்ல. எனவே, இன்ன இயல்பால் வீழ்ச்சியடைந்தான் என்று கலைஞன் கூறினால், அது நாம் அறிய வேண்டுவதொன்றுதானே? அதனை எவ்வாறு அவன் செய்கிறான் என்பதே கலையின் விளக்கமாகும். இராவணனை ஒரு காப்பியத் தலைவனோடு ஒப்பவே கம்பன் மதிக்கிறான்; இத் தலைவர்களுள்ளும், ஒர் அவலத் தலைவனுக்குள்ள அனைத்து மதிப்பையும் வழங்குகிறான். இராவணனைக் கம்பன் காட்டும் முறையிலேயே காண்பது தான் இந்நூலின் நோக்க மாகும். அவ்வாறாயின், "அவலம் என்பது என்ன என்றும், அஃது இலக்கியத்தில் எங்ங்னம் இடம் பெறுகிறதென்றும் அறியவேண்டுவது இன்றியமையாத தாகிறது; அடுத்து வரும் பகுதியில் அவலத்தைப்பற்றிய குறிப்புகள் தரப்படுகின்றன.