பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 ல் இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் இராமனையும் துன்பமடையச் செய்கிறது. இருவரும் துன்ப மடைகின்றனர் என்றால் இருவருந் தவறு செய்து தானே இருக்க வேண்டும்? எனவே, முடிவில் இராமன் படுத்துன்பம் துன்ப அளவில் நின்றுவிட, இராவணன் துன்பம் அவன் சாவில் முடிகிறது. முடியினும், அவனுடைய சாவில் நமது கவலையும் செத்துவிடுகிறது. தலைவன் சாவில் ஒருவாறு பெருமையுங் கொள்கிறோம். ஏன்? அவனுக்குக் அவனைப் பற்றிக்கொண்ட சாவிற்கும் தொடர்பு ஒன்றுமில்லை, அவன் சாக வியலாது. அவன் செய்த தவறே இறந்துவிட்டது. அவனுடைய ஏனைய பண்பு களும் அவனும் உயர்ந்ததும் சிறந்ததும் ஆன ஒரு பொருளில் இரண்டறக்கலந்துவிட்டனர். அவலத்தின் முடிவாகக் கருதப்படுவது இதுவே யாகும். அவலத் தலைவன் ஏனையோர் போல மாண்டிருப்பின் அவன் அவலத் தலைவனாகமாட்டான். அவனை அழித்த பரம்பொருளோடு அவன் மிகுதியும் தொடர் புடையவன். அத்தொடர்பு காரணமாகவே பரம்பொருள் நேரே அவனை அழிப்பதற்காக வந்தான். அவலத் தலைவனிடம் இருந்த தீமை நீக்கப்பட்டதும் அவன் உயர்ந்த அப்பொருளி னிடத்தில் ஐக்கியமாகி விடுகிறான். இக் கருத்துகள் ஹேகல் போன்ற பெரியார் களின் அவல தத்துவத்தோடு பெரிதும் மாறுபடினும் கம்பநாடன் கருத்து இதுவேயாம். ஒரு சிலர் கருதுகிற படி கம்பன் இராவணனை மீளாத் தவறு செய்த முழுப்பாவி என்று கருதவில்லை. அங்ங்னம் கருதி யிருப்பின் அவன் மாட்டு நாம் மதிப்பு வைக்கும்படிப் பாடியிருக்கவும் மாட்டான், ஏன்? கம்பனுடைய பாடல்களை நடுவுநிலை பிறழாது நோக்குவார்க்குக்