பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் என்னென்று கூறுவது! அவனது அறிவு வேலை செய்ய மறுத்துவிடுகிறதா, அல்லது, சீதைமாட்டுக் கொண்ட காதல் அவ்வளவு வன்மையுடையதா? இவ்வினாவிற்கு விடை தர நம்மால் இயலாது. இத்தகைய சந்தர்ப்பங்களில்தான் விதியின் விளையாட்டு நடைபெறுவதாகப் பெரியோர் கூறுவர். கும்பகருணனும் அதனைக் கூறுகிறான்: . வென்று இவண் வருவன்என்று உரைக்கி லேன்; விதி நின்றது பிடர்பிடித்து உந்த நின்றது. ... . .” - (கம்பன் - 7367) விதியின் விளையாட்டே தவிர, இது வேறு அன்று. இறுதியாகக் கும்பகருணன் போருக்குப் புறப்பட்டு விட்டான்; நிச்சயமாக அழியப் போகிறோம் என்பது தெரிந்தும், சுத்த வீரனைப்போலச் சாவை வரவேற்கத் துணிந்து புறப்பட்டு விட்டான். செல்லும் பொழுது இறுதியாக அண்ணனிடம் ஒருவார்த்தை கூறுகிறான். இற்றைநாள் வரைமுதல் யான்முன் செய்தன குற்றமும் உளவெனிற் பொறுத்தி கொற்றவ! அற்றதால் முகத்தினில் விழித்தல்; ஆரிய ! பெற்றனன் விடை. (கம்பன் - 7369) இத்தகைய அரும் பண்பாடு படைத்த தம்பியை அலங்கார வடிவினனாகிய இராவணன் என்ன கூறிக் கோபிக்கிறான்? அவனுடைய பெருமை எங்கே, அண்ணன் வாழவேண்டும் என்ற கருத்தோடு நல்ல வற்றைச் சொல்ல, அதற்கு இலங்கையர் கோன் இறுக்கும் விடையைக் காண்க: - மானுடர் இருவரை வணங்கி மற்றும்அக் கூனுடைக் குரங்கையும் கும்பிட்டு உய்தொழில்