பக்கம்:இருண்ட வீடு, பாரதிதாசன்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இருண்ட வீடு

கதவைத் தட்டினார் கையின் விரலால்!
பதியத் தட்டியும் பார்த்தார் பிறகு!
அழுந்தத் தட்டினார் அங்கையாலே!
அடித்தார் இடித்தார் படபட வென்றே!
எட்டி உதைத்தார் இருநூறு தடவை!
முதுகைத் திருப்பி முட்டியும் பார்த்தார்!

34