பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபது ஆண்டுகள் 103 தக்கதாகிவிட்டது--நெப்போலியனின் கல்லறை! ஆனால், காலத்தை வென்று நிற்கும் கல்லறைக்கு உரியவனாகிவிட்ட நெப்போலியன், படுத்துறங்கிய தொட்டில்? தங்கத்தாலானது அல்ல: 10ணிகள் இழைக்கப்பட்டது அல்ல! மாளிகைக் கூடத்திலே அதனை ஆட வைத்து மதுர கீதமிசைத்துத் தாதிமார் பாடவில்லை-எத்தனையோ ஏழைக் குழந்தைகளிலே அதுவும் ஒன்று. கைகளை ஆட்டு கிறது! கால்களால் உதைக்கிறது! உற்றுப் பார்க்கிறது! கல கலவெனச் சிரிக்கவில்லை; பார்ப்பவர், மறுபடியும் பார்க்க விரும்புவர் - அதுபோன்றதோர் கவர்ச்சித் தோற்றம் இருக் கிறது. ஆனால் எத்தனையோ குழந்தைகள் உள்ளன, அந் தத் தீவினில்!! கார்சிகா எனும் தீவில்! தீவினில் பிறந்தவன் வேறோர் தீவினில் அடைபட்டு இறந்துபடப் போகிறான் என்றா கண்டார்கள்! தீலினில் பிறந்த இவன், நாடுபல ஆளப்பிறந்தவன் என்றும் அன்னை எண்ணவில்லை; முடிவிலே எலினா தீவிலே சிறைவைக்கப்பட்டு, இறந்து படப்போகிறான் என்ற எண் ணம் எழக் காரணமும் இல்லை. கார்சிகா தீவிலிருந்து கிளம்பி, எலினா தீவு பே:ாய்ச் சேர்ந்தான்-எத்தகைய பயணம்! இடையிலே என்னென்ன வகையான தங்குமிடங்கள்! பெரும் படைகள் போரிட்ட களங்கள்! கோட்டை கொத்தளங்கள்! கொட்டும் குளிர் சூழ்ந்த சதுப்புகள்! பயங்கரச் சரிவுகள்! மலையுச்சிகள்! கூடங்கள்! பெருநகரங்கள்! அரண்மனைகள்! உல்லாசக் பூங்காக்கள்! புலவர்குழாம் கூடும் கழகங்கள்! கூடாரங்கள்! குழலியர் கொலுவிருக்கும் மணிமாடங்கள்!! எங்கெங்கெல்லாமோ சென்றான் -- எத்துணை எத் துணையோ நிகழ்ச்சிகளிலே கலந்து கொண்டான்! கடைசியில், ஒரு தீவிலே பிறந்தவன் மற்றோர் தீவிலே இறந்துபடுகிறான்! அன்னையின் மடியிலே தவழ்ந்திருந்தான் பிறந்த தீவில் கார்சிகாவில்! இறந்துபோது, பிடித்தடைத்த மாற்றாரின் முகாமுக்குப் பக்கத்திலே. இறுதிவரை அவனுடன் இருக்கும்