பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 இரத்தம் பொங்கிய மட்டுமல்ல; உள்ளத் தொடுத்திடும் ஆற்ற நெப்போலியன், போர் வீரன் தைத் தொடத்தக்க உணர்ச்சிகளைத் லும் மிக்கவன் என்பது, அவன் எழுதிய கடிதங்கள் மூலமும், போர் துவக்கப் பேச்சுக்களின் மூலமும் மிக நன்றாகத் தெரி கிறது. மாணவப் பருவத்திலே, நெப்போலியன், கதைகள் கட்டுரைகள் எழுதுவதிலே ஆர்வம் கொண்டிருந்தான். 'நாடக பாணி'யில் எழுதுவதிலே நெப்போலியனுக்குப் பெருவிருப்பம். உணர்ச்சிகளை உரையாடல்கள் வடிவிலே எழுதிவந்திருக்கிறான். சாதல் - கடமை-இந்த இரண்டு உணர்ச்சிகளுக்கும் ஏற்படும் மோதுதல் -- அதனால் விளையும் சிக்கல்—இவை பற்றி ஒரு உரையாடல் எழுதினான் மாணவன் நெப்போலி யன். ஒருவன் காதலுக்காக-மற்றவன் கடமைக்காக வாதா டும் முறை. உன் நாடு தாக்கப்படும்போது, உன் கடமை என்ன? நீ என்ன செய்வாய்?" "நாடு! கடமை! வெறும் வார்த்தைகள். எனக்கென்ன கவலை, அரசு கவனிக்க வேண்டிய பிரச்சினை பற்றி' "கோழையின் மனப்பான்மை இது.களியாட்டக்கார னின் போக்கு. சுயநலம். மக்களை மறந்திடும்போக்கு. மகிழ்ச்சியாக வாழத்தான் பிறந்தோம். ஆம்! ஆனால், சமுதாயத்தில் வாழும்போது, சில பொறுப்புகள் மேற்கொண் டாக வேண்டும். ஆட்சிப் பொறுப்புச் சிலரிடம் ஒப்படைக்கப் படுகிறது. அவர்கள், மதத் தரகர்களுடன் கூடிக் கொண்டு, கடமையை மறந்து காட்டுப் போக்கிலே நடந்து கொள்கிறார் கள். உன் கடமை என்ன? சமூக வாழ்வில் உனக்குள்ள பொறுப்பு என்ன? கொடுமைக்கு ஆளானவர்கள் கூவி அழைக் கிறார்கள், உதவிக்காக! கொஞ்சிக் குலவிக் கொண்டிருப் பதா, குமரியுடன் அந்த நேரத்தில்.' மாணவப் பருவத்திலே, இலட்சியம் பற்றிய உணர்ச்சி மேலிட்ட நிலையிலே இதுபோல எழுதுவது இயல்பு. பலர் இந்த இயல்பு கொள்கின்றனர். ஆனால் வயது ஆக ஆக,