பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரத்தம் பொங்கிய யில் எழுதும் வழக்கமல்லவா-அதுபோலவே, காதலில் ஏற் பட்ட தோல்வி பற்றியும் மனம் உருகும்படி சிறு கதை தீட்டிட லானான்--வரலாறு தீட்டும் வல்லமை கொண்டோன். 118 மார்சேல்ஸ் நகர வணிகரின் மகள், வனப்புமிக்க டிசயரி என்பவளை மணம் செய்துகொள்ள விரும்பினான் நெப் போலியன். அவன் செல்வக் குமாரி- நெப்போலியன் போர் வீரன்- தளபதிகூட அல்ல-களத்திலே, மற்றவரின் கட்ட ளைக்குச் கட்டுப்பட்டு, இருக்கவேண்டியவன் இந்தத் துப் பாக்கி தூக்கிக்குத் தன் மகளைத் தருவதற்குப் பட்டாடை விற்பதால் பணம் திரட்டிய வணிகருக்கு விருப்பம் இல்லை. நெப்போலியனுடைய அண்ணன் ஜோசப், ஒரு வணி கர் மகளை மணமுடித்துக் கொண்டு நிம்மதியாக வாழ்ந்து வந்தான்- அண்ணிக்கு உறவினள்தான் டிசயரி! நல் வார்த் தை பேசி இந்த மணத்தை முடித்து வைக்கவேண்டுமென்று கூட, அண்ணனுக்குக் கடிதம் எழுதி பார்த்தா எனி னும் நெப்போலியன் எண்ணம் ஈடேறவில்லை. காதலிலே தோல்வி கண்டான்; கதை பிறந்தது. கிளிசான் - யூஜினி- என்பது கதைத் தலைப்பு. கிளிசான், நெப்போலியன்! யூஜினி டிசயரி!! மனம் உடைந்து காதலனைப்பற்றி மட்டுமல்ல. அந்தக் காதலன் எப்படிப் பட்டவன், எதிலே திறமைமிக்க வன என்பதனையும் விளக்கினான், கதையில். கிளிசான், பிறவி வீரன்! குழந்தைப் பருவத்திலேயே, உலகப் பெருவீரர்களைப் பற்றி அறிந்து கொண்டிருந்தான். பள்ளிப் பருவத்திலே மற்றவர்கள்போல் மனதை மைய லில் அலையவிடாமல் போர்முறைகளை அறிவதிலும், புது முறைகள் வகுப்பதிலும் ஈடுபட்டான்- திறமை மிக்கவனா னான். வெற்றிமேல் வெற்றி! விருதுகள் பலப்பல! நாட்ட வர் போற்றினர், நமது பாதுகாவலன் இவனே என்று. செயல்வீரனான கிளிசான் இலட்சியக் கனவுகள் கொண்டவ னாகவும் இருந்துவந்தான். சில வேளைகளில், தனியாக உலவச் செல்வான் - சிந்தனையில் பல அரும்பும் மலரும்.