பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

இரத்தம் பொங்கிய

                வெறஅல்லது வீரமரணம் என்ற எண்ணமே எந்தப்

போர் வீரனுக்கும் ஏற்படும். நெப்போலியனுடைய கருத்தும் களத்திலே கடும்போரிட்டுக் கொண்டிருக்கும் நிலையில் வீரமரணம் ஏற்படவேண்டும் என்பதுதான் என்று கதை மூலம் தெரிகிறது

        கண்டோர் கலங்கிடவும் கேட்டோர் திடுக்கிடவுமான

பெரும் போர்களைக் கண்டான் நெப்போலியன் - களத்திலே கடும் புயலெனச் சுற்றிச் சுற்றி வருவது வழக்கம்.-ஆனால் அவனுக்குக் களத்திலே வீரமரணம் கிடைக்கவில்லை. எந்த மாற்றானுக்கும் அந்த ஆற்றல் இல்லை! பிடிபட்டு, அடை பட்டு, மனம் உடைந்த நிலையில், நோய் வாய்ப்பட்டு. கண்காணாத் தீவிலே இறந்துபட்டான். தீவிலே இருந்த போது பலமுறை, 'களத்திலே இறந்திருந்தால்...வீரமரணம் கிடைத்திருந்தால்...' என்று ஏக்கத்துடன் நெப்போலியன் பேசினான். அந்த அஞ்சா நெஞ்சனைக் கொல்லவரும் எந்த எதிரியும் தப்பித்துக்கொள்ள முடியாது என்பதால் போலும், நேருக்கு நேர் நின்று தாக்காமல், கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருந்து, நோய்க்கிருமிகள், உட லிலே இடம் பிடித்துக் கொண்டு, நெப்போலியனைச் சிறுகச் சிறுகச் சிதைத்துச் சாகடித்தன. இரண்டோர் முறை களத்திலே, நெப்போலியனுக்குக் குண்டடி பட்டதுண்டு. மிகச் சாதாரணமான காயம் ஒரு முறை கணுக்காலில் ஏற்பட்டது. மற்றோர் முறை, களத்திலே போர் கடுமையாக நடந்து கொண்டிருந்த இடத்திலே நெப்போலியன் சென்றபோது மாற்றார் சூழ்ந்துகொண்டனர்-ஆனால் வீரத்திலும் தியாக. உணர்விலும் மிக்க தோழன் ஒருவன். நெப்போலியன் மீது பாயவந்த குண்டுகளைத் தன்மீது விழச்செய்து கொண்டு இறந்தான்--நெப்போலியனைத் தன் உடலால் மறைத்துக் கொண்டான். நெப்போலியன் இறந்து படத்தக்க ஆபத்தான நிலை கிளம்பியபோதெல்லாம், அவன் தப்பித்துக் கொள்ளும் வாய்ப்பு எளிதாகக் கிடைத்தபடி இருந்தது.