பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரத்தம் பொங்கிய எத்துணை பெரிதாக இருப்பினும், தன்வசம் உள்ள படை யைக் கொண்டு, எதிரிப் படைவரிசையில் ஏதேனும் ஓர் பகுதியை மிகவேகமாகத் தாக்கி, எதிரிப்படை வரிசையில் பிளவை ஏற்படுத்தி, சிதறவைத்து, நிலை குலைந்து அப் பன் - ஓட, துரத்திச் சென்று தாக்கி அழிப்பது, நெப்போலி யன் கையாண்ட போர்முறை. இதற்கு அச்சமற்ற போக்கும். கணக்கிட்டபடி காரியமாற்றும் துரிதத் தன்மையும் வேண்டும். 136 'களத்திலே பெறச்கூடிய சில வெற்றிகளை இழக்கக்கூட நான் சம்மதிப்பேன். ஆனால் காலம் வீணாக்கப்படுவதை, இழக்கப்படுவதை மட்டும் விரும்பவே மாட்டேன்' என்று நெப்போலியன் ஒருமுறை கூறினான். போர் நடைபெறும்போது நெப்போலியன் குதிரை மீதேறி களத்திலே எங்கெங்கு சென்று நேரிடையாகக் காரிய மாற்ற வேண்டுமோ அங்கெல்லாம் செல்வான்-காற்றெனச் சுற்றிச் சுற்றி வருவான். வேலை கடினமானது ஆக ஆக அவன் சுறுசுறுப்பு வளரும். நிலைமையில் ஆபத்து அதிகப் பட அதிகப்படநெப்போலியனுடைய வீர உணர்ச்சிகொழுந்து விட்டு எரியும். பசி தூக்கம் மறந்து பம்பரமாகச் சுற்றுவான். களத்திலேயே ஓரிடத்தில் குதிரைமீது அமர்ந்தபடியே சில நிமிடங்கள் கண்களை மூடிக்கொள்வான்-தூக்கம்! உடவே விழித்துக் கொள்வான்- புது வேகம் பிறக்கும். | செயலாற்றுவதற்கான வேகம், அளவிடமுடியாதபடி இருந்தது. இத்தனைக்கும், சில படைத் தலைவர்கள் போல, பார்ச்கவே பயங்கரமாகத் தோற்றமளிக்கும் பேருருக்கொண் டவன் அல்ல. நாலடி பத்து அங்குல உயரம், நெப்போலி யன் - ஐந்தடிக்கும் குறைவு. குதிரை மீது அமர்ந்திருக்கும் போது மட்டுமே கெம்பீரமான தோற்றம் இருக்கும். நேர்த் தியான உடற்கட்டு! களைப்பு சலிப்பு அவனைத் தீண்டுவ தில்லை. நினைத்தபோது தூங்கவும் முடியும் - விரும்பிய உடனே விழித்துக் கொள்ளவும் முடியும். பல நாட்கள் போதுமான அளவு தூங்காமலேயே, வேலைசெய்து கொண்டிருக்க இய