பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபது ஆண்டுகள் என்னிடம் முழு நம்பிக்கை வைப்பதாக இருந்தால் படைத் தலைவனாகக் கொள்ளுங்கள்; இல்லையேல் தள் ளுங்கள்; ஆனால் கூட்டுத் தலைமை மட்டும் வேண்டாம். நிலைமைக்கேற்றபடி, நானே முடிவெடுத்து திட்டமிட்டுப் போர் நடாத்தினால் மட்டுமே வெற்றிகள் கிட்டும்- எதற் கும் இருவர் கூடிப் பேசி, கருத்துக்களிலே ஒன்றுபட்ட தன் மையை ஏற்படுத்திக் கொண்டுதான், போரினை நடத்திட வேண்டும் என்றால், வெற்றி பல பெற்றளிக்க முடியாது. எனவே, என் போக்கைத் தடுக்கும் ஓர் தடையைப் புகுத்த வேண்டாம். நான் ஏற்றுக் கொள்வதற்கில்லை என்று நெப் போலியன் கண்டிப்பாகத் தெரிவித்தான் - செய்திகொண்டு வந்தவனைத் திருப்பி அனுப்பிவிட்டான். 147 கடுங்கோபம் எழுந்து என்ன பயன்? நெப்போலிய னுடைய மறுப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்க இயலா நிலை, அரசாளும் பொறுப்பேற்றுக் கொண்டோர்களுக்கு. ஒரே ஆண்டில், நெப்போலியன் ஆஸ்ட்ரியாவையும் அதற்குத் துணை நின்ற நாடுகளையும் லோடி, அர்கோலி, ரிவோலி எனும் களங்களிலே தாக்கி வெற்றிபெற்று, காம்ப்போ பார்மியோ என்னும் இடத்திலே. சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டான். வியக்கத்தக்க வெற்றிக ளைப் பெற்று, தன் சுட்டுவிரல் காட்டும் வழி நடக்கத் துடித் திடும் பெரும் படையுடன் போர்க்கோலப் பொலிவுடன் விளங்கும் நெப்போலியனை வாதிடுவதிலே வல்லவர்களான ஆட்சிப் பொறுப்பினர், தட்டிக் கேட்கக்கூடத் தயக்கம் காட்டினர். எதிரிப் படைகள் தோற்று சின்னாபின்னமானதுடன் 150,000 பேர்கள், நெப்போலியனிடம் பிடிப்பட்டவர். இத்தகைய வீர வெற்றிகளைப் பெற்றவனை, விரட்டிவிட முடியுமா, குழுகூடி ஆணை பிறப்பிப்பதன் மூலம்! முகத் திலே கரி பூசுவது போன்றதுதான், நெப்போலியன் செய்கை -என்ன செய்வது. ஆட்சிக் குழுவினர், வெளியே தெரியாம