பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபது ஆண்டுகள் 151 டம் சிரித்து மகிழ்கிறான் என்பது பற்றி எல்லாம் விளக்கமாக. இதழ்கள் வெளியிட்டன. பிரான்சு, ஒவ்வொரு நாளும், நெப்போலியனைப் பற்றிய பாராட்டத்தக்க செய்தி ஏதாவ தொன்று படித்தபடி இருந்தது. ஒவ்வொரு இல்லத்திலும், அவனைப் பற்றிய பேச்சு! வாலிபர்கள் அவன் காட்டிய வீரத் தைப் பாராட்டினர்! முதியவர்கள் அவனுடைய அறிவுத் தெளிவைப் புகழ்ந்தனர்! மங்கையர் அவனுடைய காதல் மேம்பாடு பற்றி சசிந்துருகிப் பேசினர். நெப்போலியன் பிரான்சு நாட்டுப் பொதுச் சொத்து ஆகிவிட்டான். இதனை நெப்போலியன் நன்கு உணர்ந்திருந்தான்- எதிர்காலத்துக் கான திட்டம் அரும்பாக இருந்தது -- மலரும் நாளை எதிர் பார்த்தபடி இருந்து வந்தான். கைகளைப் பின்புறம் கட்டிக் கொண்டு, வீட்டுத் தோட்டத்திலே உலவியபடி, ஏதேதோ எண்ணியபடி இருந்தான். "உன்னைக் காணத் திரள் திரளாக மக்கள் எவ்வளவு ஆர்வத்துடன் ஓடி வருகிறார்கள். பார்த்தனையா?" என்று கேட்பார்கள், சிலர். "இதைக் கண்டு மகிழ்ச்சிப்பெருக்கெடுக் கிறதல்லவா என்றுதானே கேட்கிறீர்கள். இதிவே என்ன பொருள் இருக்கிறது, மக்கள் காட்டும் ஆரவத்தில்! என் னைத் தூக்கில்போட ஏற்பாடு செய்யட்டும்- அதை வேடிக் இதைவிடப் பெரிய கூட்டம் கூடிவிடும்." லக பார்க்க என்று கூறுவான். மக்கள் காட்டும் ஆர்வத்தை மட்டும் நம்பி திட்டமிடக் கூடாது என்பது அவன் எண்ணம். ஆனால் மக்க ளின் ஆர்வத்தைப் பெறவேண்டும்; ஆர்வம் அவர்களுக்கு ஏற்படுவதற்காக வேலை செய்யவேண்டும்; தூண்ட வேண் டும் என்பதிலே கவனம் செலுத்தத் தவறவில்லை. பிரச்சாரம் மிக வலிவுள்ள ஆயுதம் என்பதை உணர்ந்திருந்தான். நெப்போலியன், இங்கிலாந்தின் மீது படை எடுத்து அந்த நாட்டை அழிக்க வேண்டும் என்று திட்டம் வகுத்த போது, படைகளை வரிசைப்படுத்துவதற்கு முன்பே, பிரச் யந்திரத்தைத்தான் ஏவினான். இங்கிலாந்திடம் அலட்சியம், வெறுப்பு, பகை உணர்ச்சி ஏற்படத் தக்கபடி சார