பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 இரத்தம் பொங்கிய இவ்விதமான பேச்சு உல்லாச விடுதிகளில், தங்குமிடங் களில், உணவு விடுதிகளில், கேளிக்கைக் கூடங்களில். துரைத்தனத்தாரின் ஒற்றர்கள் இதுபோன்ற செய்தி களைத் திரட்டிக் கொடுத்தனர் ஆட்சிக் குழுவினரிடம். அவர்கள் அந்தத் தகவல்களை நெப்போலியனிடமே கொடுத் தனர் - அவ்வளவு நம்பிச்கை அவனிடம், அவன் அக்ரமம் ஏதும் செய்யமாட்டான், மக்களாட்சி முறையைக் கெடுக்க மாட்டான், ஆதிக்கம் பெற அலையமாட்டான் என்பதிலே! நெப்போலியனும், இந்தத் தகவல்கள் தரப்பட்டபோது பதறவுமில்லை; மறுக்கவுமில்லை; புருவத்தை நெறிக்கவு மில்லை; பொறிபறக்கப் பேசவில்லை; புன்னகை மட்டும் செய்தான். ஆல்ப்ஸ் மலையைக் கடந்து சென்று ஆஸ்ட்ரியப் படை களை முறியடித்து இத்தாலியை அடிபணிய வைத்தவன் எத்தனை காலத்துக்கு பாரிஸ் பட்டினத்திலே, காட்சிப் பொருளாக இருந்து கொண்டிருக்க முடியும், வேறு புதிய வீரச்செயலில் ஈடுபடாமல். கஞ்சன் கரத்தில் சிக்கிய தங் கக் கட்டிபோல, இத்தனை ஆற்றல் மிக்கவன் கிடைத்தான் பயன்படுத்திக் கொள்ளத் தெரியாத ஆட்சிக்குழுவினரிடம். வானத்திலே வட்டமிடவேண்டிய வானம்பாடி இவன், பட்டு நூலால் கட்டப்பட்டு சிறார்கள் பறக்கவிட்டு வேடிக்கை பார்த்திடும் பொன்வண்டு அல்ல! சந்தனம் கிடைத்தும், அதை அறைத்தெடுக்கத் தெரியாமல் குளிர்போக்கிக்கொள்ள மூட்டப்படும் நெருப்புக்கு விறகாக்கப் பார்க்கிறார்கள், விவர மறியாதவர்கள் -- என்று பலவிதமாக எண்ணத் தலைப்பட்ட னர். வீரத்தலைவனுக்கு ஏற்றவேலை தரப்படவில்லை என்ற பழிக்கு அஞ்சி, ஆட்சிக்குழுவினர், நெப்போலியனை, இங்கி லாந்து நாட்டைத் தாக்கத் தளபதி ஆக்கினர். நெடுங்காலமாக இருந்துவரும் ஆவல் இது--கடலிலே கட்டப்பட்ட கோட்டை என விளங்கிவரும் இங்கிலாந்தைப் பிடித்தாளவேண்டும் என்பது. அளவிவே சிறியது என்றாலும் புகழ்மிக்க வரலாறுபெற்றிருந்த இங்கிலாந்து, வாணிபத்தில்