பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரத்தம் பொங்கிய அனுபவம் நெப்போலியனுக்கு ஏற்பட்டிருந்தால். ! அவனை மயக்க ஒரு கிளியோபாட்ரா அங்கு இருந்திருந்தால்...! 158 அங்கு இல்லை; ஆனால் அவன் சென்ற கப்பலிலேயே கிளியோபாட்ரா ஆகவேண்டும் என்ற நினைப்புடன் ஒரு மங்கை இருந்தாள்--ஆண் உடையில். அவள், கிளியோ பாட்ரா அல்ல; ஆகையினாலே, கன்னம் கிள்ளி விளையாட, அன்னம் சொர்ணம் என்று உரையாட மட்டுமே அவளை நெப்போலியன் பயன்படுத்திக் கொண்டான். எப்படியும் நெப்போலியனுடைய நேசத்தைப் பெறவேண்டும் என்ற நினைப்பு, இந்தப் பெண்ணை ஒருவருக்கும் தெரியாமல், ஒயிலை ஆணுடையால் மறைத்துக்கொண்டு, கப்பலேறச் செய்தது. இரகசியம் வெளிப்பட்டது; நெப்போலியன், கடற் பயணத்தின்போது குளிர்காற்றைப் பெற்று இன்புறுதல் போல, இவள் நேசம் பெற்று மகிழ்ந்தான். வீரம் போரிடக் கிளம்பியபோதா, விளையாட்டு! அவ்வளவு சபலமா என்று கேட்கத் தோன்றும். அந்தக் காலத்திலே அவ்விதமான 'விளையாட்டு களில் மேல்மட்டத் தவர் ஈடுபடுவது, சமுதாயத்தில் ஏற்றுக் கொள்ளப்பட் ஒரு முறையாகிக் கிடந்தது. அனைவருமே அப்படித்தான் என்ற நிலையும் அல்ல; அந்த நிலை, மேன்மைக்குச் சான்று என்ற கருத்தும் நிலைத்துவிடவில்லை; ஆனால் கண்டு கண் சிமிட்டுவர், இவனுக்கு இப்படி ஒரு பழக்கம்! என்று கோபம் குறைவாகவும் வேடிக்கை மிகுதியாகவும் கலந்து குரலொலி யில்.

முறையா, சரியா என்பதுகூட இருக்கட்டும்; பழம்

பெரும் நாட்டின் மீது படை எடுக்கச் செல்லும்போது உல்லாசியை உடனழைத்துச் செல்வதா?' என்று கேட்கத் தோன்றும். நெப்போலியன், தன் உடன் அழைத்துச் சென்ற வர்கள், கேளிக்கை மூட்டிடும் கோல மயில்களை அல்ல; பொறியியலார், வான நூலறிவினர், மருத்துவர், புலவர், மண்வள ஆராய்ச்சியாளர், புதை பொருள் நுணுக்கம் உணர்