பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரத்தம் பொங்கிய டப்பாக்களைப் பரிசளித்தான்-மாமன்னனான' காலத்தில், வேண்டியவர்களுக்கெல்லாம் மணிமுடிகளைப் பரிசளித் 170 தான். ஆலந்துக்கு அதிபன் ஜோசப், நேப்பிள்ஸ் நாட்டு மன்னன் லூயி, வெஸ்ட்பேலியா வேந்தனானான் ஜெரோம்!- இரண்டு ஆண்டுகளானதும் ஜோசப், ஸ்பெயின் நாட்டுக்கு மன்னனாக்கப்பட்டான். மணிமுடிகள், நெப்போலியனிடம் பூப்பந்துகளாயின! ஆஸ்ட்ரியா, பிரஷ்யா, ரஷ்யா--இந்த மூன்று நாடு களும். நெப்போலியனுடைய கண்களை உறுத்திக் கொண் டிருந்தன. கருத்தை மருட்டிக் கொண்டிருந்தன. தனித் தனியாக இவைகளைத் தீர்த்துக்கட்ட முனைவான் ஒரு முறை; இவைகளுக்குள் கிலேசம் ஏற்படுத்தி வலிவைப் பிளந் திட நினைக்கிறான் ஒருமுறை! ஒவ்வொரு முறையிலும் வெற்றி கிட்டுகிறது. ஆனால் நிலைக்கவில்லை; நிலைகுலைந் துக் கீழே வீழ்ந்துவிட்டது போலத் தெரிகிறது. ஆனால் மீண் டும் தலைதூக்கிப் போரிட முனைகின்றன இந்த நாடுகள். பேரரசு அமைக்க நான் எண்ணியதற்குக் காரணமே, அப்போதுதான் அமைதி ஏற்பட்டு, ஒழுங்கு நிலைநாட்டப் பட்டு, மக்கள் வளம் நிரம்பிய வாழ்வு பெறுவர் என்று நெப்போலியன் தத்துவம் பேசினான்-ஓரரசு -பேரரசு- ஆற்றலரசு - என் அரசு--என்று எழுச்சியுடன் முழக்கமிட் டான். ஆனால், ஒவ்வோர் இடத்து இன, தேசீய உணர்ச்சி களை அழித்து ஒழித்துத்தான் இப்படி ஒரு பேரரசு அமைக்க முடியும்; தத்தமது இன, தேசீய உணர்ச்சிகளை மாய்த்துக் கொள்ள, மன்னர்கள் மட்டுமல்ல, எந்த நாட்டு மக்களும் ஒப்புவதில்லை. சில வேளைகளிலே தாங்கமுடியாத தாக்கு.