பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

173 இருபது ஆண்டுகள் களை நமக்குள் பங்கிட்டுக் கொள்வோம்." என்று பூரிப் புடன் நெப்போலியன் கூறினான். புகை வெளியே தெரிய விடாமல் நெருப்பை மூட்டத்தக்க தந்திரம் கொண்ட ரஷிய அதிபர், அலெக்சாண்டர், சொல்ல வேண்டுமா ! தெரியாதா! என்பன போன்ற இருபொருள், மறைபொருள் பேச்சுப் பேசி நெப்போலியனை ஏமாளியாக்கினான். ஆற்றல் அளவு கடந்தது, கட்டுக்கடங்காத ஆவல்— எனவே நெப்போலியன் மனதிலே, அலை அலையாக எண் ணங்கள், விதவிதமான திட்டங்கள் குமுறி எழுந்தவண்ணம் இருந்தன. இங்கிலாந்தைத் தாக்கவேண்டும் என்ற திட்டம் வெற்றி பெறுவதற்கே வெகுபாடு படவேண்டும்; ஆற்றல் அனைத் தையும் செலவிட வேண்டும். இங்கிலாந்திலே என் படை இறங்கினால், சிலமணி நேரம் போதும், அந்நாட்டவரை நையப் புடைத்து வீழ்த்த என்று இறுமாந்து பேசினான் நெம் போலியன் -- வீரன், ஐயமில்லை; வெற்றி பெற்றுமிருப் பான், மறுத்திட இயலாதுதான். ஆனால் இங்கிலாந்து நாட்டிலே படைகள் இறங்க வேண்டுமே! இடையே உள்ள கடலில், பிரிட்டிஷ் கப்பற்படை விழிப்புடன் இருக்கிறது. எத்தனையோ களங்களில் வெற்றிபெற்ற பிரான்சு, கடற் போரில் இங்கிலாந்திடம் டிரபால்கர் எனும் போரில் தோற் றுத்தானே இருக்கிறது. இதனை எண்ணும்போது நெப்போலியனுக்கு எரிச்சல் மேலிட்டது; அச்சம் எழவில்லை. சரி, இங்கிலாந்தைத் தாக்குவதையே ஒரே குறிக் கோளாகவாவது கொண்டு செயலாற்ற முடிந்ததா என்றால் இல்லை-இடையில் பல இடங்களில் பகை மூள்கிறது.