பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரத்தம் பொங்கிய கடைசியில், 'எதிரிகளைத் தாக்குவதுதான் யார்?' என்று கேட்கிறார்கள் தளபதிகள். ரஷிய அதிபர் கூறுகிறார், "நாம் போரிடத் தேவையில்லை! கடுங்குளிரும் பனி மழை யும் அவர்களைத் தாக்கி அழிக்கும். நமது பலமிக்க படை அவை!" என்று கூறுகிறார். ரஷிய அதிபர் கூறியது போலத்தான் நடைபெறுகிறது. 1812-ம் ஆண்டில் துவக்கப்பட்ட ரஷியப்படை எடுப்பு, நெப்போலியனைத் திகைக்கச் செய்துவிட்டது. தேடித் தேடிப் பார்க்கிறான். ரஷியப் படையைக் காணோம். ஊரூராகப் பாய்கிறது பிரான்சுப் படை; போரிடத் துடிக் கிறது; ரஷியப்படை. இல்லை! 180 'வில்னா பிடிப்பட்டது; விட்பெஸ்க் பிடிபட்டது; ஸ்ம லான்ஸ்க் பிடிபட்டது!' என்று பாரிசுக்குச் செய்திகள் செல் கின்றன. ஆவால் ஒரு இடத்திலாவது எதிரியைத் தாக்கி அல்ல! எதிரி இருப்பதில்லை; எதுவும் இருப்பதில்லை. இடையிடையே, ரஷிய காசாக் குதிரை வீரர்கள், பிரான்சுப் படையை பக்கவாட்டத்தில் தாக்கிவிட்டு, முகாம் களை அழித்துவிட்டு, பாய்ந்தோடி விடுவார்கள். அலையும் அலையும் மோதுதல்போல், மலையும் மலை யும் தாக்குதல் நடத்திக் கொள்வதுபோல, இருபெரும் படை கள் ஒன்றை ஒன்று எதிர்த்து நின்று போரிடுவதுதான் அது வரை நெப்போலியன் கண்ட போர் முறை. இது விந்தை யாக இருக்கிறது!