பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



134 (களவு இறையனார் அகப்பொருள் ஆற்றுவித்து அதனெதிர் மொழிதலும், பிறவும் எல்லாம் கற்பி னொடு ஒக்கும் என்பது. இப்பிரிவு தலைமகள் அறியப் பிரியுமோ எனின், அறியவே பிரியும், தோழிக்கும் தலைமகட்கும் எல்லாம் உணர்த்தி என்பது. அவ்வாறு பிரிந்தவிடத்துத் தலைமகள் வேறுபட்டாள்; வேறு பட, 'எம்பெருமான் இதற்கு நல்லது புரிவான் பிரிவான்; பிரிய, நீ ஆற்றாயாவதோ தகாது' என்ற தோழிக்கு, 'யான் பிரிய ஆற்றேனாயினேன் அல்லேன்; அவர் சென்ற கானத்துத் தன் மையை நோக்கி அவர்க்குக் கவன்று நினைந்து ஆற்றேனாயினேனை ஏதிலர் அதனைத் திரிய உணர்ந்தார்' என ஊர்மேல் வைத்துச் சொல்லும்; அதற்குச் செய்யுள் : தலைவி ஊரவர்தன்மை கூறல் ‘மின்றா னனைய விளங்கொளி வேலொடு வெண் திரைமேல் நின்றா னிலமன்ன னேரியன் மாறன் இகன்முனைபோற் கொன்றா றலைக்குஞ் சுரமன்பர் நீங்கலுங் கோல்வளைகள் சென்றா லதுபிறி தாகவிவ் வூரவர் சிந்திப்பரே.' (20அ) இயற்பட மொழிதல் இப்பிரிவின்கண்ணே ஆற்றாளாய் வேறுபட்ட தலைமகளை இவ்வாறன்றி ஆற்றுவிக்கலாகாது எனக் கருதித் தலைமகனை இயற்பழித்த தோழிக்குத தலைமகள் இயற்பட மொழியும்; அதற்குச் செய்யுள் : 'தொல்கவின் தொலையத் தோள் நலம் சாஅய் நல்கார் நீத்தனர் ஆயினும் நல்குவர் நட்டனர் வாழி தோழி குட்டுவன் அகப்பா அழிய நூறிச் செம்பியன் பகற்றீ வேட்ட ஞாட்பினும் மிகப்பெரிது அலரெழச் சென்றனர் ஆயினும் மலர்கவிந்து மாமடல் அவிழ்ந்த காந்தளஞ் சாரலின் ஞால்வாய்க் களிறு பாந்தட் பட்டெனத் துஞ்சாத் துயரத் தஞ்சுபிடிப் பூசல் நெடுவரை விடாகத் தியம்பும் கடுமான் புல்லிய காடிறந் தோரே.' (நற்றிணை, கச) இயற்பழித்தல் அல்லதூஉம், நெட்டிடை கழிந்து பொருள்வயிற் பிரிந்த விடத்துத் தலைமகளது ஆற்றாமைகண்டு தோழி தலைமகனை