பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



சூத்திரம்-10) இறையனார் அகப்பொருள் 151 'அன்னமரபிற் பிறவும்' என்றதனாற் பகற்குறிக்கண்னும் இரவுக்குறிக்கண்ணும் வந்து ஒழுகுந் தலைமகற்குத் தலைமகளும் தோழியும் ஆற்றாத்தன்மையராய் வரைவு பயப்பச் சொல்லுஞ் சொல்லெல்லாங் கொள்க. அக்கிளவி பல; அவற்றுட் சில வருமாறு: நிலைகண்டுரைத்தல் 'நெய்த்நின்ற வேல்நெடு மாரனெங் கோன் அந்தண் சேரியென்னும் மைந்நின்ற குன்றச் சிறுகுடி நீரைய வந்து நின்றால் கைந்நின்று கூப்பி வரையுறை செய்வமென் னாதுகண்டோர் மெய்ந் நின் றுணர்ப எனினுய்யு மோமற்றிம் மெல்லியலே.' (உகூடு) என்பது, 'இரவுக்குறியிடத்து வந்து நின்றால், கண்டார் நும்மை முருகவேள் என்று கருதாது, மெய்ம்மை உனர்ப வாயின், இவள் பெருநாணினளாகலின் இறந்துபடுமே!' என்னும்; அதுகேட்டுத் தலைமகன், 'பெரியதோர் இழுக் குடைத்தாக ஒழுகினேன் காண்' என, அன்று ஒருவகையான் முற்பட்டுப் பிற்றைஞான்று வரைவானாம். இன்னும், அன்னமரபிற் பிறவும்' என்றதற்குச் செய்யுள் : படைத்து மொழி கிளவி அன்னாய் நெருநல் நிகழ்ந்தது கேளயல் வேந்திறைஞ்சும் பொன்னார் கழல்தெடு மாறன் குமரியம் பூம்பொழில்வாய் மின்னார் மணிநெடுந் தேர் கங்குல் வந்தின்று மீண்ட துண்டால் என்னா முகஞ்சிவர் தெம்மையும் நோக்கினள் எம்மனையே.' (உசு ) என்பது இரவுக்குறியின்கண் தலைமகன் சிறைப்புறத் தானாவதறிந்து தலைமகட்குத் தோழி படைத்துமொழிந்து சொல்லியது. எங்ஙனமோவெனின், 'நெருநல், “என்னை நீர் விளையாடுங் கானலிடத்து ஒரு தேர்வந்து போயிற்று?" என முனிந்து என்னை முகநோக்கிப் போயினாள் அன்னை, இன்னது கருதி யென்பது அறியேன்' என்னும்; என, 'ஒக்கும், யான் வந்து ஒழுகுகின்ற ஒழுக்கம் புறத்தார்க்குப் புலனாயிற்றுப் போலும்' எனப் பிற்றை ஞான்றே வரைந்து புகுவானாம். இன்னும், அன்னமரபிற் பிறவும்' என்றதற்குச் செய்யுள் : * பண்இவர் சொல்லிகண் டாள் தென்னன் பாழிப் பகை தணித்த மண் இவர் சீர்மன்னன் வாள்நெடு மாறன் மலயமென்னும் விண் இவர் குன்றத் தருவிசென் றாடியொர் வேங்கையின் கீழ்க் கண் இவர் காதற் பிடியொடு நின்ற கருங்களிறே.' (உ.எ)