பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



சூத்திரம்-கூடு) இறையனார் அகப்பொருள் 159 6 இனிப், பொருள்வயிற் பிரியுமே யெனின், முன்னர்ப் பொருளிலன் ஆயினானாம்; ஆகவே, எள்ளுநர்ப் பணித்தலும் இரந்தோர்க்கீதலும் என்னும் இவையெல்லாம். பொருட்குறை பாடு உடையார்க்கு நிகழாமையின் இக் குறைபாடெல்லாம் உடையனாம் ; அவையுடையானது பொருவிறப்பு என்னையோ என்பது. | இனிப், பரத்தையர் மாட்டுப் பிரியுமேயெனின், இவன் கண்டார்கண் தாழ்வானாம் ; ஆகலான், தலைமகள் மாட்டே கிடந்த அன்பிலன் ஆயினானாம். அல்லதூஉம், கண்டுழி யெல்லாம் உள்ளத்தைச் செலீஇ, உள்ளத்தின்வழி ஓடுமாகலான் நிறை யிலன் ஆயினானாம்; நிறையிலானது பொருவிறப்பு என்னையோ என்பது. இவையெல்லாஞ் சொல்லப் பெரிது மாறுகொண்டு காட் டிற்று. எனின், மாறுகொள்ளாது ; மாறுகொள்ளாமைக்குக் காரணம் என்னையோ எனின், | ஓதற்குப் பிரியும் என்பது, கற்பான் பிரியும் என்பதன்று; பண்டே குரவர்களாற் கற்பிக்கப்பட்டுக் கற்றான் , அறம் பொருள் இன்பம் வீடுபேறுகள் நுதலிய நூல்களெல்லாம்; இனிப், பரதேசங்களினும். அவை வல்லார் உளரெனிற் காண்டற்கும், வல்லார்கள் உள்வழிச் சென்று தன் ஞானம் மேற்படுத்து அவர் ஞானங் கீழ்ப்படுத்தற்கும் பிரியும்' எனக்கொள்க. வ இனி, நாடு காத்தற்குப் பிரியும் என்பது, நலிவார் உளராக நலிவுகாத்தற்குப் பிரியும் என்பதன்று ; நாட்டகத்து நின்றும் நகரகத்துத் தமக்கு உற்றது உரைக்கலாத மூத்தார்களும் பெண்டிர்களும் இருக்கைமுடவரும் கூனரும் குருடரும் பிணி யுடையாரும் என இத் தொடக்கத்தார் தம் முறைக்கருமங் கேட்டுத் திருத்து தற்பொருட்டாகவும், காட்டகத்து வாழும் உயிர்ச்சாதிகள் ஒன்றனையொன்று நலிவன உளவாயினவிடத் துத் தீதென்றவற்றை முறைசெய்தற்கும், கொடிவலைப்பட்டுக் கிடந்தனவற்றைத் துறை நீக்குதற்பொருட்டாகவும், வளன் இல்வழி வளம் தோற்றுவித்தற்பொருட்டாகவும், தேவகுலமே சாலையே அம்பலமே என்று இத் தொடக்கத்தனவற்றை ஆராய்வதற்கும், அழிகுடியோம்புதற்கும் பிரியும் என்பது. அல்லதூஉம், பிறந்த உயிர் தாயைக்கண்டு இன்புறுவதுபோலத் தன்னாற் காக்கப்படும் உயிர்வாழ் சாதிகள் தன்னைக் கண்டு இன்புறுதலின் தான் அவர்கட்குத் தன் உருக்காட்டுதற்கும், மாற்றரசர் ஒற்று வந்தவிடத்து அவர் முன்னர்த் தனது