பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



180 இறையனார் அகப்பொருள் (கற்பு எனின், தலைமகன் வாயில்களும் தலைமகள் மாட்டு உளவாம்; தலைமகள் வாயில்களும் தலைமகன்மாட்டு உளவாம்; ஆகலான், அவர்கள் உணர்த்த உணரும் என்பது; அல்லதூஉம், தலைமகள் தமரன்றே தலைமகற்கு நாளானும் படிமக்கலத்தொடு செல்வார். அற்றைநாளாற் செங்கோலத்தொடுஞ் செல்ல உணரும் என் பாரும் உளர்.) இனி, ஒரு திறத்தார், பூப்பு நிகழ்ந்த நாளாலே 'சேடி யைச் செங்கோலஞ்செய்து செப்புப்பாலிகையுட் செம்பூவும் நீரும் கொண்டு அவன் அடிமேற் பெய்து போக, உணரும் என்பாரும் உளர். இது மேலாயினாரிடங்களிற் பூப்பு உணர்த்து மாறென்று இவ்வகை சொல்லுவர். நல்லது அறிந்து கொள்க. இவ்வகை பூப்பு உணர்த்தப்பட்ட தலைமகன் தன் நெஞ்சிற் குச் சொல்லியதற்குச் செய்யுள் : தலைமகள் தன் நெஞ்சிற்குரைத்தல் ' மஞ்சார் இரும்பொழில் வல்லத்து வாள் மன்னர் போரழித்த அஞ்சா அடுகளி யானையி னானகன் ஞாலமன்ன பஞ்சார் அகலல்கு லாள் தன்மை சொல்லும் பணைமுலைமேற் செஞ்சாந் தணிந்துவர் தாள் செய்ய கோலத்துச் சேயிழையே.' () இவ்வகையாற் பூப்பு உணர்ந்து வாயில்களோடுஞ் சென்று தலைமகளிடத்தானாய் முந்நாளுஞ் சொற்கேட்கும்வழி உறைவா னாவது. உறைந்தபின்னை ஒன்பது நாளும் கூடி உறைவானாவது. முந்நாளுஞ் சொற்கேட்கும்வழி உறைதற்குக் காரணம் என்னையெனின், தலைமகன் பரத்தையர் மாட்டானாக முன்னின்ற பொறாமை உண்டன்றே, அது முந்நாளுஞ் சொற்கேட்கும்வழி உறையவே நீங்கும். நீங்கிய பின்னைக் கூட்டமாகவே கரு நின்றது மாட்சிப்படும். அது நோக்கி உணர்த்தப்பட்டது. அதனான் அறமெனப்பட்டது. அல்லாதுவிடின், தலைமகள் மாட்டு ஓர் பொறாமை தோன் றும், பரத்தையர்மாட்டுரின்றும் வந்தான் என ; அப் - பொறாமை ஒரு வெகுளியைத் தோற்றுவிக்கும்; தோற்றிய வெகுளி பெரியதோர் வெப்பத்தைச் செய்விக்கும்; வெப்பத் தினாற் கரு மாட்சிப்படாதாம்; படா தாகவே, அறத்தின் வழு வாம் என்பது. அதனான், முந்நாளுஞ் சொற்கேட்கும் வழி உறைவானாம் என்பது. பூப்புப் புறப்பட்ட முந்நாளும் உள்ளிட்ட பன்னிருநாளும் என்பது துணிபுற்றாங்கு முந்நாளும் கூடி உறையப் படுங்குற்றம் 1. இளம்பிடியைச். 2. உண்டென்று எய்தும்.