பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிட்கிந்தா ராமன் <I 13

இணைகம்பனே. வாலி, இராமனுடைய அம்பு பட்ட அள வில் சினக்கின்றானேயன்றி இறுதியில், தீயன பொறுத்தி’ என வேண்டி வரங்கள் இரண்டைப் பெற்றுப் பரமபதம் அடைகின்றான். இராவணன் மட்டுமே இராமனை வணங்கியதாகக் கம்பர் உரைத்தாரில்லை. அவன் எதிர் நிலைத் தலைவனாதலால் அவ்வாறு செய்யவில்லை. இராமனுடைய வீரத்தினையும் ஆற்றலையும் வியக் கின்றான்; ஆனால் அம்பு பட்ட அளவில் இராமனைத் துதிக்கவோ, வாழ்த்தவோ இல்லை என்பது குறிக்சத் தக்கது. தாடகை தொடங்கி இராவணன் இறுதியாக அனைவரும் இராமனுடைய அம்பிற்கு இலக்கானவர்களே. ஒவ்வொருவரையும் ஒவ்வொரு காரணத்திற்காக வதைக்க வேண்டிய கட்டாயம் இராமனுக்கு வந்துற்றது. எந்த வகையிலும் இராமனுடைய புகழ் குன்றவில்லை. என்பதே கம்பர்தம் கருத்து. o

கம்பனுடைய காவியம் உயர்நிலை பெற்றுத் திகழ் வதற்கு அடிப்படைக் காரணமே கிட் கிந்தா காண்டம் என்று கூறினால் மிகையாகாது. வாலிவதை பற்றி அறிஞர் கள் பலர் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளனர். அது பற்றிப் பேசுவதே ஒரு தனித்தகுதி எனக் கருதுகின்ற பெருமக்கள் மிகுதி. கம்ப னின் பாலராமன், அயாத்தியா ராமன், ஆரண்ய ராமன், சுந்தர ராமன், செயராமன் ஆகியோர் ஐயப்பாட் டிற் கிடமின்றிப் பாராட்டப்படும் போது, கிட்கிந்தா ராமன் மட்டுமே பிரச்சினைக்குரியவன் போல் தோன்றுகின்றான். எனவே இக்காண்டத்தினைப் பிரச்சினைக்குரிய காண்டம்

Problem Canto) argôt ml 3w.fo@vitúo.

ஆட்சிப் பொறுப்பினையும் மனைவியையும் விதியின் வலிமையால் பிரிந்த நிலையில் இருந்த இராமன் சுக்கிரீ

இ.கா.-8