பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

இலக்கியக் காட்சிகள்


என்றும் வசை பாடுகின்றான் வாலி. இவற்றையெல்லாம் பொறுமையோடு கேட்டுக் கொண்டிருந்தான் இராமன். ஏன்? அவனிடத்தில் அக் குற்றங்கள் படிந்தா கிடந்தன? இல்லை! எல்லையற்றபொறுக்கும் ஆற்றலே காரணம். குற் றத்தையே குணமாகக் கொண்டு வாழ்ந்த ஒருவன் மரணத் தின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் போழ்து அவன் சொற்களைப் பொருட்படுத்தாமல் இருப்பதுதான் சிறத்தது என்று கருதி அமைதியாகவிருந்தான். அறத்தி லிருந்து வழுவியர்களே தங்களை அறத்தின் பிறப்பிடம் என்று கருதிப் பிறரிடம் ஓயாமல் பிதற்றுகின்றதனை இன்று கூடக் காணலாம். மில்டனுடைய துறக்கநீக்கத்தில் சாத்தான் வேதம் ஒதுவதற்கு ஒப்பானது இது வாலி கூறிய குற்றசாட்டுகளுக்கு இராமன் பொறுப்பாக மாட் டான் என்பதைப் பல்வேறிடங்களில் இராமனே குறித் தமை நோக்குதற்குரியது. நந்தா விளக்கனைய நாயகன்’ என்று தந்தையை விளித்து, இனி வாய்மைக்கு யாருளரே!’ என்று போற்றியிருக்கின்றான். பரதனைப் பற்றி இராமனே இலக்குவனிடம்,

அத்தா இதுகேளென ஆரியன் கூறு வான் இப் பித்தாய விலங்கின் ஒழுங்கினைப் பேச லாமோ எத்தாயர் வயிற்றினும்பின் பிறந்தோர்கள் எல்லாம் ஒத்தாற் பரதன் பெரிதுத்தமன் ஆதல் உண்டோ!

(கிட் ; வாலிவதைப் படலம் : 3,4)

என்று வியந்துரைத்திருக்கின்றான். தன் மனைவியைப் பிரிந்தவன் திகைப்பான் என்றால், பிறன் மனைவியைக் கொண்ட வாலி எவ்வாறு முறை திறம்பாதவன் போலவும் அறம் திறம்பாதவன் போலவும் பேசவியலும்? தன்னுடைய குற்றங்களை மறைப்பதற்காக மற்றவனைக் குற்றவாளியென்று கூறித் தப்பித்துக் கொள்ளும்