பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிட் கிந்தா ராமன் 123

னாகவே விளங்குகின்றான். காண்டம் முழுமையும் மனித னாகவே இராமன் காட்டப்படுகின்றான்.

“வேறுள குழுவை யெல்லாம் மானுடம் வென்ற தன்றே’’

(கிட் ; நட்புக் கோட்படலம் : 19)

வானதோ மண்ணதோ மற்று வெற்பதோ ஏனைமா நாகர்தம் இருக்கைப் பாலதோ தேனுலாங் தெரியலாய் தெளிவ தன்றுகாம் ஊனுடை மானிட மான துண்மை யால்

(கிட்; காலன்காண் படலம்: 29)

என்ற இவ்விரு குறிப்புகளே இ ரா ம ன் மனிதனாகவும் மனிதத் தன்மை படைத்தவனாகவும் இக் காண்டத்தில் உணர்த்தப்பெறுகிறான் என்பதற்குப் போதுமானவை. வாலியை மனித நிலையில்தான் கொன்றான் என்பதை விளக்கவே கம்பர் இவ்வாறெல்லாம் உணர்த்தியிருக் கின்றார்.

சுக்கிரீவனுடைய துன்பத்தைத் துடைத்த பின்னர் தான் இராமன் தன் துணை இருக்குமிடத்தைத் தேடும்படி கூறினான் என்றால், அவனுடைய பொதுநோக்கும் புலப் படுகின்றதன்றோ?

மனைவியைப் பிரிந்து வ ரு ந் து ம் கணவனாக இராமனை நம்மனோர்க்குணர்த்தவே கார்காலப் படலத் தைக் கம்பர் படைத்தார் போலும்!

வாலியைக் கொல்ல இராமனால் இயலுமோ என்று ஐயுற்ற சுக்கிரீவன் கிட்கிந்தையின் அரசனான பின்னர்ப் பரதனைப் போன்று பக்தியுடையவனாகத் திகழ்ந்தான் என்ற பாடலைப் படிக்கும்போழ்து படிப்பவர்களின் உள்ளம் நெகிழ்கிறது. (கிட்கிந்தைப் படலம் 125 எண் பாடல்.) வைணவ சம்பிரதாயப்படி , சுக்கிரீவன் என்ற