பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்றல் வரவு I 27

திரியும். அந்நிலத்திற் பூக்கும் பூ பாலைப்பூ. எனவே அந் நிலம் பாலை எனப்பட்டது. இவ்வாறு நிலத்திற்கு மலர் களால் பெயர் அமைந்திருப்பது தமிழர்தம் இயற்கை பரவும் இனிய பண்பாட்டினை நுவலும்.

அடுத்து, நிலத்தில் வீசும் காற்றுக்கு அவர்கள் வழங்கி யுள்ள பெயர்களும் அவர்தம் மதிநுட்பத்தினை மேலும் துவலக் காணலாம். வடக்கேயிருந்து வீசும் காற்றினை ‘வ ைட’ என்றனர். தெற்கே யிருந்துவரும் காற்று ‘தென்றல்’ எனப்பட்டது. மேற்குக் காற்று கோடை என்ற பெயரால் வழங்கப்பட்டது. கொண்டல்’ என்பது கிழக்கேயிருந்து வீசும் காற்றின் பெயராகும். ஆக இவ்வாறு அவர்கள் காற்றுக்குப் பெயர் வழங்கியுள்ள திறம் உன்னி மகிழ்தற்குரியது.

பரிபாடல் சங்கத் தொகை நூல்களில் ஒன்றாகும். அந் நூல், செல்வேள் மாண்பினையும், திருமால் சிறப் பினையும், மதுரை அழகினையும் கிளத்துகின்றது. ஆசிரியர் நல்லந்துவனார் செவ்வேளைப் பற்றிப் பாடி யுள்ள பரிபாடலில், பரங்குன்று இமயக் குன்ற நிகர்க்கும்’ எனப் போற்றப்பட்டுள்ளது. இத்தகு பெருமைக்குரிய திருப்பரங்குன்றத்திலிருந்து தென்றல் புறப்பட்டு வரும் சிறப்பினைப் பின்வருமாறு ஆசிரியர் நல்லந்துவனார் குறிப்பிடுகின்றார்.

குன்றின், அருவிதாழ் மாலைச் சுனை : முதல்வநின் யானை முழக்கங் கேட்ட கதியிற்றே காரின் குரல்; குரல் கேட்ட கோழி குன்றதிரக் கூவ மதங்ணி வாரண மாறுமா றதிர்ப்ப எதிர்குதி ராகின் றதிர்ப்பு மலைமுழை ஏழ்புழை யைம்புழை யாழிசைகேழ்த் தன்ன வினம்