பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

இலக்கியக் காட்சிகள்


“பித்தே றிச்சுழலும் செகப் பேய்பிடித் துப்பவத்தே செத்தேன் உன்னருளால் பிழைத் தேன்மறு சென்மமதாய்! எத்தோ டங்களையும் பொறுத் தென்று மிரங்குகவென் அத்தா, உன்னையல்லால் எனக் கார்துணை

(யாருறவே?’

(шт. ст. 162)

என்ற இவருடைய தேவாரப்பாடல்,

‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா!’ எனத் தொடங்கும் சுந்தரர் பாடலே யாகும். இக் காவியத்துள் வரும் கடைதிறப்புப் பாடல்கள், செயங்கொண்டாரின் கலிங்கத்துப் பரணியில் வரும் கடைதிறப்புப் பாக்களை அடியொற்றியே செய்யப்பட்டுள்ளன.

‘மாயா உலக மயக்கறுத்து

வரையாக் கிருபை தந்தளித்த

துய பெருமான் திருவடிக்குத்

தொழும்பன் கபாடம் திறமினோ!’

(பா. எ. 166)

போன்ற பாடல்கள், ஆன்மிகன், இடுக்க வாயில் கதவைத் திறக்க வேண்டிப் பாடுவதாகும்.

முடிவுரை

தமிழ் மரபைத் தழுவியதாய், முன்னோர் பொன் கருத்துக்களை ஏற்றதாய், கற்பனை வளத்துடன், உருவக உவமை அணிச் சிறப்புகளோடு மேலாகிய மோட்சம் நோக்கிய ஆன்மிகனின் அரிய பயணம் குறித்த இரட்சணிய யாத்திரிக இலக்கியம் போன்ற சிறந்த இலக்கியம், தமிழ் இலக்கியங்களுள் அத்தி பூப்பதாய்க் காண்பது அரிதாகும்.

_ _ கா_